விமர்சனம் என்ற பெயரில் அவதுாறு பரப்பினால் போலீசில் புகார் தரலாம்: ஐகோர்ட்
விமர்சனம் என்ற பெயரில் அவதுாறு பரப்பினால் போலீசில் புகார் தரலாம்: ஐகோர்ட்
ADDED : டிச 03, 2024 01:25 PM

சென்னை: 'சினிமா என்ற பெயரில் அவதுாறு பரப்பினால் போலீசில் புகார் அளிக்கலாம்' என சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது.
தியேட்டர்களில் ரசிகர்களின் விமர்சனங்களாலும், ஊடகங்களின் விமர்சனங்களாலும் படம் வசூல் கடுமையாக பாதிக்கப்படுவதாக புகார் எழுந்தது. திரைப்பட விமர்சனங்களை யு-டியுப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக், எக்ஸ் உள்ளிட்ட தளங்களில் வெளியிட மூன்று நாட்களுக்குத் தடை விதிக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு இன்று(டிச., 3) விசாரணைக்கு வந்தது. விசாரித்த ஐகோர்ட் நீதிபதி சவுந்தர் கூறியதாவது:
* விமர்சனம் என்ற பெயரில் அவதூறு பரப்பினால் போலீசாரிடம் புகார் அளிக்கலாம்.
* திரைப்படங்கள் வெளியான 3 நாட்களுக்குள் விமர்சனங்களை வெளியிடத் தடை விதிக்க முடியாது.
* விமர்சனம், கருத்து சுதந்திரம் என்பதால் பொத்தாம் பொதுவாக உத்தரவு பிறப்பிக்க முடியாது.
* மத்திய, மாநில அரசுகள் , யூடியூப் நிறுவனம் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை நீதிபதி ஒத்திவைத்தார்.