தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/தி.மு.க., என்றால், இரண்டு கொம்பு முளைத்தவர்களா? கேட்கிறார் இ.பி.எஸ்.,

தி.மு.க., என்றால், இரண்டு கொம்பு முளைத்தவர்களா? கேட்கிறார் இ.பி.எஸ்.,

தி.மு.க., என்றால், இரண்டு கொம்பு முளைத்தவர்களா? கேட்கிறார் இ.பி.எஸ்.,


ADDED : பிப் 05, 2025 09:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 05, 2025 09:48 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: தி.மு.க., என்றால், இரண்டு கொம்பு முளைத்தவர்களா? என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை: சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே டாஸ்மாக் கடை ஒன்றில் கள்ளச்சாரயம் விற்கப்படுவதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. மரக்காணம் மரணங்களில் இருந்தோ, நாட்டையே உலுக்கிய கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரணங்களில் இருந்தோ இந்த ஸ்டாலின் மாடல் அரசு ஒரு பாடம் கூட கற்கவில்லையா?



போலீஸுக்கு பணம் கொடுத்து தான் விற்கிறோம் என்று கள்ளச்சாராயம் விற்பவன் தைரியமாக சொல்லும் அளவிற்கு கள்ளச்சாராய விற்பனையை நிறுவனமயப் படுத்தியுள்ளதற்கு ஸ்டாலின் மாடல் தி.மு.க., அரசு வெட்கப்பட வேண்டும்.

போதாக்குறைக்கு, தி.மு.க., கட்சிக்காரன் எனும் அடையாளம் வேறு. தி.மு.க., என்றால், இரண்டு கொம்பு முளைத்தவர்களா? அவர்கள் எந்த தவறு செய்தாலும் காவல்துறை கண்டுகொள்ளாதா?

தமிழகத்தில் நீங்கள் ஆட்சிக்கு வந்தது, உங்கள் கட்சி அடையாளத்தை லைசன்சாக பயன்படுத்தி, சகல குற்றங்களையும் தி.மு.க.,வினர் செய்வதற்கு தானா?

உடனடியாக இந்த கள்ளச்சாராய விற்பனையில் தொடர்புள்ள அனைவரையும் கைது செய்வதோடு, எந்தவித அரசியல் குறுக்கீடும் இன்றி அனைவர் மீதும் சட்ட நடவடிக்கையை உறுதி செய்ய வேண்டும். மேலும், தமிழகம் முழுக்க கள்ளச்சாராயத்தை ஒழிக்க கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு இ.பி.எஸ்., கூறியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us