sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

''திமுக கரை வேட்டி கட்டினால் பொட்டு வைக்காதீங்க...'': ஆ.ராசா அடாவடி பேச்சு

/

''திமுக கரை வேட்டி கட்டினால் பொட்டு வைக்காதீங்க...'': ஆ.ராசா அடாவடி பேச்சு

''திமுக கரை வேட்டி கட்டினால் பொட்டு வைக்காதீங்க...'': ஆ.ராசா அடாவடி பேச்சு

''திமுக கரை வேட்டி கட்டினால் பொட்டு வைக்காதீங்க...'': ஆ.ராசா அடாவடி பேச்சு

184


UPDATED : ஏப் 02, 2025 03:24 PM

ADDED : ஏப் 02, 2025 12:20 PM

Google News

UPDATED : ஏப் 02, 2025 03:24 PM ADDED : ஏப் 02, 2025 12:20 PM

184


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திமுக எம்.பி.,யான ஆ.ராசா, ஹிந்துக்களுக்கு எதிராகவும், ஹிந்து மத நம்பிக்கைகளை புண்படுத்தும் விதமாகவும் அவ்வப்போது பேசி சர்ச்சையை ஏற்படுத்துவதை வழக்கமாக கொண்டவர்.

சிலருக்கு ஏதாவது ஒரு வகையில் மீடியாக்களில் பெயர் அடிபட வேண்டும் என்ற வியாதி இருக்கும். இந்த ‛‛கியூ''வில் முதலில் நிற்பவர் ஆ.ராசா. இவர் மட்டுமே திராவிட கொள்கைகளை தாங்கிப் பிடிப்பவர் என்று மற்றவர்கள் நினைக்க வேண்டும் என விரும்புபவர். மற்றவர்களுக்கெல்லாம் ஒன்றும் தெரியாது என்று நினைப்பவர்.

'நாங்கள் ராமருக்கு எதிரிகள்; சூத்திரனாக இருக்கும் வரை நீ விபச்சாரியின் மகன். ஹிந்துவாக இருக்கும் வரை நீ பஞ்சமன். ஹிந்துவாக, இருக்கும் வரை நீ தீண்ட தகாதவன். எத்தனை பேர் விபச்சாரியின் மகனாக இருக்க விரும்புகிறீர்கள்?' போன்ற பல துவேஷங்களை ஹிந்து மதத்திற்கு எதிராக அள்ளி வீசியவர்.

அந்த வகையில் தற்போது மீண்டும் ஒரு சர்ச்சை கருத்தை பேசி ஹிந்துக்களின் கோபத்திற்கு ஆளாகி இருக்கிறார் இந்த ஆ.ராசா.

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் திமுக மாணவர் அணி செயலாளர்கள் மற்றும் துணை செயலாளர்களின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற ஆ.ராசா பேசியதாவது:

கடவுள் தேவைப்படுவோர் வைத்து கொள்ளலாம். சாமி கும்பிட வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் நீங்களும் பொட்டு வைத்து, சங்கியும் பொட்டு வைக்கும்போது, நீங்களும் கையில் கயிறு கட்டி, சங்கியும் கையில் கயிறு கட்டும்போது எவன் சங்கி, எவன் திமுககாரன் என்ற வித்தியாசம் தெரியாது. இதனால் தான் சொல்கிறேன் திமுக கரை வேட்டி கட்டும்போது பொட்டு வைக்காதீங்க. இவ்வாறு பேசியுள்ளார்.

கட்சி வேறுபாடின்றி நெற்றியில் விபூதி, குங்குமம் இட்டுக்கொள்வது அனைத்து ஹிந்துக்களின் பழக்கம். தான் ஒரு உண்மையான ஹிந்து என்று அவர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்கிறார்கள். தெய்வ நம்பிக்கையையும் பறைசாற்றுகிறார்கள். இவர்கள் எல்லோரும் அரசியலுக்கு அப்பாற்பட்டவர்கள்.

ஆதி காலத்து வழக்கம்


பழநி, திருப்பதி கோயில்களுக்கு சென்று வரும் பக்தர்கள் கடவுளை நினைத்து கைகளில் கயிறு கட்டிக்கொள்வது திமுக என்ற கட்சி தோன்றுவதற்கு முன்பு இருந்தே உள்ள வழக்கம். இதற்கும் அரசியலுக்கும் என்ன சம்மந்தம்?. பா.ஜ., கட்சியினர் கைகளில் கயிறு கட்டுவது, அரசியல் அடையாளத்திற்காக அல்ல. தான் ஒரு தெய்வ நம்பிக்கை உள்ளவன் என்று காட்டிக்கொள்வதற்காக.

இதை புரிந்து கொள்ளாத ராசா, தமிழகத்தில் உள்ள ஹிந்துக்கள் நேற்று கயிறு வாங்கி, இன்று கையில் கட்டிக்கொள்வதாக நினைத்துக்கொண்டு பினாத்திக்கொண்டு இருக்கிறார்.

துர்கா ஸ்டாலின் திமுக அனுதாபி இல்லையா


இந்நிலையில், திமுக கரை வேட்டி கட்டினால், ஹிந்து என்ற அடையாளத்தை தூக்கி எறிய வேண்டும் என்பது போல ஆ.ராசா பேசியது திமுகவினருக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலினின் மனைவி துர்கா, கோயில் கோயிலாக சென்று வருகிறாரே, அவர் திமுக அனுதாபி இல்லையா.

ஆ.ராசாவின் பேச்சு தொடர்பாக திமுக அமைச்சரான சேகர்பாபுவிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ''அது ராசாவின் தனிப்பட்ட கருத்து. தலைவர் (ஸ்டாலின்) அதுபோன்று எதுவும் கூறவில்லை'' என்றார்.






      Dinamalar
      Follow us