பாசிசத்தை, தி.மு.க., அரசு செய்கிறது என்றால், அவர்கள் என்னுடைய செருப்புக்கு சமம்.: வேலூர் இப்ராஹிம்
பாசிசத்தை, தி.மு.க., அரசு செய்கிறது என்றால், அவர்கள் என்னுடைய செருப்புக்கு சமம்.: வேலூர் இப்ராஹிம்
ADDED : நவ 04, 2024 02:51 AM
பா.ஜ., சிறுபாண்மை அணி தேசிய செயலர் வேலுார் இப்ராஹிம் பேசியதாவது:
ஒரு சமூகத்தை இழிவுப்படுத்தும் போது, பி.சி.ஆர்., சட்டத்தை, அரசு அமல்படுத்துவது போல், அந்தணர்களை இழிவுப்படுத்துவோருக்கு எதிராக, தமிழக அரசு சிறப்பு சட்டத்தை கொண்டு வர வேண்டும்.
ஒரு மாதத்திற்கு முன்பு, பேச்சு அரங்கு என்ற பெயரில் முதல்வரும் கூட, பிராமண சமூகத்தை இழிவுப்படுத்துவது போல நடந்து கொண்டுள்ளார்; இது கண்டிக்கத்தக்கது. இன்று ஹிந்து மத்தை இழிவுப்படுத்துவோர், நாளை முஸ்லிம்களையும் இழிவுப்படுத்துவர். எனவே இந்த அசுக்கு, நமது அனைவரின் எதிர்ப்பையும் காட்ட வேண்டும்.
ஹிந்துத்துவம், சனாதான தர்மம் என்றால், அதை பாசிசம் என தி.மு.க.,- காங்., - வி.சி., என அனைவரும் அனைவரும் கூறுகின்றனர். திருமாவளவன் கட்சியில் உள்ள ஆளூர் ஷாநவாஸ் எம்.எல்.ஏ.,'திராவிட மாடல் என்றால், பிராமணர்கள் இல்லா கூட்டமைப்பை உருவாக்குவது' என்கிறார். ஒரு சமூகத்தை அழிக்க நினைப்பது தான் பாசிசம். அந்த பாசிசத்தை, தி.மு.க., அரசு செய்கிறது என்றால், அவர்கள் என்னுடைய செருப்புக்கு சமம்.
இவ்வாறு அவர் பேசினார்.