தி.மு.க., ஆட்சி நீடித்தால் அடுத்த தலைமுறைக்கு ஆபத்து
தி.மு.க., ஆட்சி நீடித்தால் அடுத்த தலைமுறைக்கு ஆபத்து
UPDATED : ஏப் 03, 2025 10:13 PM
ADDED : ஏப் 03, 2025 10:11 PM
பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்ட வக்ப் வாரிய திருத்த மசோதாவை, இஸ்லாமிய பெண்கள் உட்பட பலரும் வரவேற்றுள்ளனர். நாட்டில் ராணுவம், ரயில்வேக்கு அடுத்தபடியாக வக்ப் வாரியத்திற்கென, 12 லட்சத்து 40 ஆயிரம் ஏக்கர் நிலம் உள்ளது. வக்பு சொத்துக்களை முறைப்படுத்தி, ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையிலேயே வக்ப் வாரிய திருத்த மசோதா பார்லி.,யில் கொண்டு வரப்பட்டுள்ளது.
வக்ப் வாரிய திருத்தச் சட்டத்தை எதிர்ப்போருக்கு, வரும் 2026 சட்டசபை தேர்தலில், மக்களே பாடம் புகட்டுவர்.
தி.மு.க., ஆட்சி நீடிக்கக்கூடாது. தவறுதலாகக்கூட நீடித்தால், அடுத்த தலை முறையினருக்கு பேராபத்து. அதனால், தி.மு.க., அரசை அகற்ற வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் ஜனநாயக கடமை.
வரும் சட்டசபை தேர்தலுக்கு எங்களின் ஒரே பிரசாரம் - 'தி.மு.க., தலைமையிலான கூட்டணிக்கு ஓட்டளிக்காதீர்கள்' என்பதாகவே இருக்கும். தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை மாற்றம என்படு புரளி.
ராஜா, மூத்த தலைவர், தமிழக பா.ஜ.,

