sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தொகுதி மறுவரையறையால் தமிழகம் பாதிக்கப்பட்டால் நாட்டில் கூட்டாட்சிக்கான பொருளே இருக்காது: முதல்வர் ஸ்டாலின் பேச்சு

/

தொகுதி மறுவரையறையால் தமிழகம் பாதிக்கப்பட்டால் நாட்டில் கூட்டாட்சிக்கான பொருளே இருக்காது: முதல்வர் ஸ்டாலின் பேச்சு

தொகுதி மறுவரையறையால் தமிழகம் பாதிக்கப்பட்டால் நாட்டில் கூட்டாட்சிக்கான பொருளே இருக்காது: முதல்வர் ஸ்டாலின் பேச்சு

தொகுதி மறுவரையறையால் தமிழகம் பாதிக்கப்பட்டால் நாட்டில் கூட்டாட்சிக்கான பொருளே இருக்காது: முதல்வர் ஸ்டாலின் பேச்சு

1


ADDED : மார் 22, 2025 02:35 AM

Google News

ADDED : மார் 22, 2025 02:35 AM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : 'தொகுதி மறுவரையறையால், தமிழகமும், நாம் அழைத்துள்ள மாநிலங்களும் பாதிக்கப்பட்டால், இந்திய நாட்டில் கூட்டாட்சிக்கான பொருளே இருக்காது' என, முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

லோக்சபா தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கூட்டு நடவடிக்கைக் குழுவின் முதல் ஆலோசனை கூட்டம், சென்னையில் இன்று நடக்கவுள்ளது.

இது தொடர்பாக, முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு:


தொகுதி மறுவரையறை. இதுதான் இப்போது பேசுபொருள். தி.மு.க., ஏன் இதை பேசுபொருளாக்கியது என்றால், 2026-ல் தொகுதி மறுவரையறை கண்டிப்பாக நடந்தே ஆக வேண்டும். அப்போது, மக்கள் தொகை அடிப்படையில், தொகுதி மறுசீரமைப்பு செய்தால், தமிழகத்தில் எம்.பி.,க்கள் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படும். இதை உணர்ந்து தான் நாம் முதலில் குரல் எழுப்பி இருக்கிறோம்.

இது, எம்.பி.,க்கள் எண்ணிக்கை சார்ந்த பிரச்னை மட்டும் இல்லை. மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்னை. அதனால்தான், தமிழத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளையும் அழைத்து கூட்டம் நடத்தினோம். பா.ஜ., தவிர, மற்ற அனைத்து கட்சியினரும் ஓரணியில் நின்று, நியாயமான தொகுதி மறுவரையறை வேண்டும் என்ற, ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினோம்.

அதில், இந்த தொகுதி மறுவரையறையால் பாதிக்கப்பட உள்ள மற்ற மாநிலங்களையும் ஒருங்கிணைத்துப் போராட வேண்டும் என்று முடிவு எடுத்தோம். அதற்காக ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா, ஒடிசா, மேற்கு வங்கம், பஞ்சாப் ஆகிய, ஏழு மாநிலங்களின் முதல்வர்களுக்கும், பார்லிமென்டில் பிரதிநிதித்துவம் உள்ள எல்லா கட்சிகளின் தலைவர்களுக்கும் கடிதம் எழுதினேன்.

அக்கடிதங்களை ஒரு அமைச்சர் மற்றும் ஒரு எம்.பி., அடங்கிய குழுவினர் நேரில் சந்தித்து விளக்கம் அளித்தனர். நானே அவர்களுடன் தொலைபேசியிலும் பேசினேன். சிலர் நேரடியாக வர சம்மதித்தனர். சிலர் ஏற்கனவே ஒப்புக்கொண்ட நிகழ்ச்சிகளால், பிரதிநிதிகளை அனுப்பி வைப்பதாகக் கூறினர்.

இந்த முதல் ஆலோசனை கூட்டம், இன்று சென்னையில் நடக்கவுள்ளது. இப்போது, இந்தக் கூட்டத்திற்கு அவசியம் என்னவென்று பலரும் கேட்கின்றனர். தொகுதி மறுவரையறையால், தமிழகமும், நாம் அழைத்துள்ள மாநிலங்களும் பாதிக்கப்பட்டால், இந்திய நாட்டில் கூட்டாட்சிக்கான பொருளே இருக்காது.

ஜனநாயகத்திற்கான மதிப்பு இருக்காது. பார்லிமென்டில் நம் குரல்கள் நசுக்கப்படும். நம் உரிமைகளை நிலைநாட்ட முடியாது. இது, இந்த மாநிலங்களை அவமதிக்கிற செயல்.

எனவே, மக்கள் தொகையை கட்டுப்படுத்தி, சிறப்பாக செயல்பட்டு, நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்கும் மாநிலங்களுக்கு மத்திய அரசு தண்டனை கொடுத்து விடக்கூடாது. அதனால் தான், தமிழகத்தில் இருக்கும் பெரும்பாலான கட்சிகளின் ஒருங்கிணைந்த சிந்தனையின்படி, மற்ற மாநிலங்களை ஒருங்கிணைக்கிற இந்தக் கூட்டம் நடக்கவுள்ளது.

இந்தக் கூட்டத்தில் ஒரு முடிவு எடுக்கப்படும். அதன் அடிப்படையில், அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம். நம் நியாயமான கோரிக்கைகள் நிச்சயம் வெற்றியடையும். நம்முடைய இந்த முன்னெடுப்பு இந்தியாவைக் காக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

முன்கூட்டியே வந்த பினராயி


தி.மு.க., சார்பில் இன்று நடக்கும் கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக, கேரள முதல்வர் பினராயி விஜயன், நேற்றே சென்னை வந்து விட்டார். மேலும், கர்நாடகா, பஞ்சாப், ஒடிசா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள், 16 பேரும் சென்னை வந்துள்ளனர். இன்று எட்டு பேர் வர உள்ளனர்.

அன்று அரசு... இன்று தி.மு.க.,!

தமிழகத்தில் தொகுதி மறுசீரமைப்பு பிரச்னை தொடர்பாக, முதல்வர் ஸ்டாலின் தலைமையில், அனைத்துக் கட்சி கூட்டம், சென்னை தலைமை செயலகத்தில், அரசு சார்பில் சில நாட்களுக்கு முன் நடத்தப்பட்டது. அன்று, அரசு சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியைப் போன்று, இன்று தி.மு.க., சார்பில், நாடு முழுதும் உள்ள கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, தனியார் நட்சத்திர ஹோட்டலில் நடத்தப்படுகிறது. இன்றைய நிகழ்ச்சிக்கான செலவுகள் அனைத்தையும், தி.மு.க.,வே ஏற்கும் என்று சொல்லப்படுகிறது. அப்படியென்றால், அன்று நடத்தப்பட்ட அனைத்துக் கட்சி கூட்டத்தையும், தனியார் ஹோட்டலில் வைத்து, தி.மு.க., சார்பிலேயே நடத்தி இருக்கலாமே என, பலரும் கேள்வி எழுப்புகின்றனர். அன்றைக்கு நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தை, தி.மு.க., நடத்தியிருந்தால், தமிழகத்தின் பிரதான கட்சிகளே கூட கூட்டத்தை புறக்கணித்திருக்கும் என்பதால், அரசு சார்பில் நடத்தியுள்ளனர் எனக் கூறப்படுகிறது. ***








      Dinamalar
      Follow us