ADDED : ஆக 31, 2025 04:04 AM
விஜய் அரசியல்வாதியாகி விட்டதால், விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து கூறுகிறார். ஆனால், ஸ்டாலின் உள்ளிட்ட சில தலைவர்கள், கிறிஸ்துமஸ், ரம்ஜானுக்கு வா ழ்த்து கூறுகின்றனர்; தீபாவளி, விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து கூறுவதில்லை.
பொது வாழ்விற்கு வந்துவிட்டால், அனைத்து மதம், ஜாதியினரையும் சமமாக பார்க்க வேண்டும். ஹிந்து மதத்திற்கு மட்டும் பாரபட்சம் பார்ப்பது துரோகம்.
ஹிந்துக்களின் ஓட்டு, கேட்காமலேயே கிடைக்கும் என்ற எண்ணம் தமிழக அரசியல்வாதிகளுக்கு உள்ளது. காரணம், ஹிந்துக்களிடையே ஒற்றுமை இல்லை.
சிறுபான்மையினர் என்பது தவறான வார்த்தை. அனைவரையும் மக்களாக பார்க்க வேண்டும். செல்வாக்குமிக்க எம்.ஜி.ஆரையே கூத்தாடி என்றனர்; அவர் அரசியலுக்கு வந்ததும் மலையாளி என்றனர். இப்போது, விஜயை கூத்தாடி என்கின்றனர். கடவுள் சிவனும் கூத்தாடி தான். உதயநிதி ஒரு நடிகர். அப்படி என்றால் அவரும் கூத்தாடி தான். துணை முதல்வராக இருப்பதால் துணைக் கூத்தாடி என்று கூறலாம்.
- பேரரசு
திரைப்பட இயக்குநர், தமிழக பா.ஜ.,

