உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : மே 24, 2026 04:12 AM
அ நிறம் | அளவு
தி.மு.க., ஓட்டுகளால்தான் காங்., வெற்றி பெற்றது என்பதை ஏற்க முடியாது. இது, தி.மு.க.,வின் மேலாதிக் க மனோபாவத்தையே வெளிப்படுத்துகிறது.
தேர்தல் படுதோல்விக்கு பின்னரும்கூட, அவர்கள் பாடம் கற்கவில்லை. தி.மு.க., இளைஞரணி கூட்டத்தில், ஸ்டாலின் , உதயநிதி முன்னிலையில், காங்.,கையும் ராகுலையும் விமர்சித்து கோஷமிட்டு இருப்பது வேதனை தருகிறது. தேர்தல் வெற்றிக்கு உதவும் கட்சிகளுக்கு, ஆட்சியில் பங்கு தர மறுப்பதே, தி.மு.க.,வின் படுதோல்விக்கு காரணம். நேற்று வரை கூட்டணியில் இருந்த கட்சிகளை, வரம்பு மீறி இழிவாக விமர்சிப்பதைத் தவிர்க்க வேண்டும். இல்லையெனில், கடும் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
- ராஜேஷ்குமார்
சுற்றுலாத்துறை அமைச்சர், காங்கிரஸ்
