சாராயம் குடித்து இறந்தால் தி.மு.க., ஆட்சியில் மதிப்பு
சாராயம் குடித்து இறந்தால் தி.மு.க., ஆட்சியில் மதிப்பு
ADDED : அக் 15, 2025 06:32 AM

தி.மு.க., ஆட்சியில், சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் கொடுக்கின்றனர். மோசமான சாலைகளால், விபத்தில் இறப்போருக்கு, 3 லட்சம் ரூபாய் தருகின்றனர். சாராயம் குடித்து இறந்தால் தான், தி.மு.க., ஆட்சியில் பெரிய மதிப்பு கிடைக்கிறது. பள்ளி, கல்லுாரி வாசல்களிலேயே கஞ்சா தாராளமாகி விட்டது. பா.ஜ., நிகழ்ச்சிக்கு, ஹெலிகாப்டரில் இருந்து பூ துாவ அனுமதி மறுக்கின்றர். இதுபற்றி கேட்க, போலீஸ் அதிகாரிகளை தொடர்பு கொண்டால், மொபைல்போனை எடுக்கவில்லை. 'தி.மு.க.,வை நம்பி இருக்காதீர்கள்; ஆட்சி மாற்றம் வரும்போது நீங்கள் இருக்க மாட்டீர்கள்' என போலீஸ் அதிகாரிகளை எச்சரிக்கிறேன். கரூர் சம்பவத்தின்போது, உடனே, 30 ஆம்புலன்ஸ்கள் எப்படி வந்தன; ஒரே இரவில் 41 உடல்களை எப்படி உடற்கூறாய்வு செய்தீர்கள் என உச்ச நீதிமன்றம் கேட்டுள்ளது. கரூர் சம்பவத்தில் நல்ல தீர்ப்பு வரும்; எந்த அமைச்சர் சிக்க போகிறார் என தெரியவில்லை.
- நாகேந்திரன், தலைவர், தமிழக பா.ஜ.,