ADDED : ஜூன் 06, 2025 06:08 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'ஆப்பரேஷன் சிந்துார்' வாயிலாக இந்தியாவின் முப்படைகளும், தங்களுடைய செயல்திறனால் பாகிஸ்தானின் கொழுப்பை அடக்கியது. இப்படியொரு சூழலில், முன்னாள் முதல்வர் கருணாநிதி இருந்திருந்தால் என்ன செய்து இருப்பாரோ, அதையே தான் முதல்வர் ஸ்டாலினும் செய்துள்ளார். எதை பாராட்ட வேண்டும் என அவருக்குத் தெரியும். அதனால் தான், நம் ராணுவ நடவடிக்கையை பாராட்டியுள்ளார்.
உலக அளவில் இந்திய ராணுவம் பலமானது என்பதை, பாகிஸ்தான் மீதான நடவடிக்கை வாயிலாக மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளோம் என ராணுவ தளபதி கூறுகிறார். அவர் கூறியதை நாங்களும் அப்படியே ஏற்கிறோம். ஆனால், பாக்., மீதான நடவடிக்கையால், இந்தியாவுக்கு ஏற்பட்ட இழப்புகளை தெரிவிக்க வேண்டாமா? அதை விரும்பவில்லை என்றால், ராணுவ நடவடிக்கை மீது சந்தேகம் தான் வரும்.
- டி.ஆர்.பாலு,
பொருளாளர், தி.மு.க.,