அரசு துறைகளில் பிரச்னையா 'வாட்ஸ் ஆப்'பில் புகார் அளிக்கலாம்
அரசு துறைகளில் பிரச்னையா 'வாட்ஸ் ஆப்'பில் புகார் அளிக்கலாம்
ADDED : ஆக 15, 2025 02:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பவியல் துறை சார்பில் மக்கள் துறை ரீதியான புகார்களைப் பதிவு செய்ய அந்தந்த துறைகளின் இணையதளத்திற்கு சென்று பதிவு செய்ய வேண்டி உள்ளது.
அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வரும், 'வாட்ஸ் ஆப்' செயலி வாயிலாக, அரசின் திட்டங்களை தெரிந்து கொள்ளும் வகையில் 'சாட்பாட்' என்ற சேவையை தமிழக அரசு விரைவில் வழங்க உள்ளது. இதன் வாயிலாக, மக்கள் எளிமையாக சேவைகளை பெறுவதுடன், புகார் அளிக்கவும் முடியும். முதற் கட்டமாக அரசின், 50 சேவைகள் இதில் இடம்பெற உள்ளன.
இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், தொழில்நுட்பத் துறை அமைச்சர் தியாகராஜன், மெட்டா நிறுவனத்தின் இந்திய வர்த்தக இயக்குனர் ரவி கார்க், அரசு மின்னாளுமை முகமை இயக்குனர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆகியோர் முன்னிலையில் நேற்று கையெழுத்தானது.