sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 திண்டிவனம் பஸ் நிலையத்தை திறந்தால் பதவி பறிபோகும்: முதல்வர் நேரில் வர ராமதாஸ் வலியுறுத்தல்

/

 திண்டிவனம் பஸ் நிலையத்தை திறந்தால் பதவி பறிபோகும்: முதல்வர் நேரில் வர ராமதாஸ் வலியுறுத்தல்

 திண்டிவனம் பஸ் நிலையத்தை திறந்தால் பதவி பறிபோகும்: முதல்வர் நேரில் வர ராமதாஸ் வலியுறுத்தல்

 திண்டிவனம் பஸ் நிலையத்தை திறந்தால் பதவி பறிபோகும்: முதல்வர் நேரில் வர ராமதாஸ் வலியுறுத்தல்

19


ADDED : ஜன 31, 2026 03:17 AM

Google News

ADDED : ஜன 31, 2026 03:17 AM

19


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: 'திண்டிவனம் பஸ் நிலையத்தை, முதல்வர் ஸ்டாலின் நேரில் வந்து திறந்து வைத்து, மூடநம்பிக்கைக்கு முடிவு கட்ட வேண்டும்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

அவரது அறிக்கை:

திண்டிவனத்தில், 2001ல் மேம்பாலம் திறக்கப்பட்டது. இப்பாலம் அமைய காரணமான, அன்றைய மத்திய தரைவழி போக்குவரத்து துறை அமைச்சர் வெங்கட்ராமனின் அரசியல் வாழ்க்கை அஸ்தமன மானது.

கடந்த 2009ல், 'திண்டிவனம் ஏரி பகுதியில் பஸ் நிலையம் அமைக்கப்படும்' என அறிவிக்கப்பட்டது.

இதற்காக பெரும் முயற்சி மேற்கொண்ட, திண்டிவனம் நகராட்சி தலைவராக இருந்த ஹீராசந்தின் அரசியல் வாழ்வு அஸ்தமனமாகியதால், மூடநம்பிக்கை வலுப்பெற்றது.

கடந்த 2011 முதல், 10 ஆண்டு கள் தொடர்ந்து ஆட்சியில் இருந்த அ.தி.மு.க., திண்டிவனம் பஸ் நிலையம் பேச்சை எடுக்கவில்லை. 2023ம் ஆண்டில் திண்டிவனத் தில் பஸ் நிலையம் கட்ட, அன்றைய தி.மு.க., அமைச்சர் மஸ்தான் அடிக்கல் நாட்டினார்.

அதை தொடர்ந்து, மஸ்தானின் கட்சிப் பதவி மற்றும் அமைச்சர் பதவி பறிபோயின. இதனால், மூடநம்பிக்கை மேலும் வலுப்பெற்றது.

இதனால், திண்டிவனத்தில் வளர்ச்சிப் பணிகள் என்றாலே, அதிகாரத்தில் உள்ளவர்கள் அலறியடித்து ஓடும் நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், வரும் 5ம் தேதி, அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க, திண்டிவனம் அடுத்த தீவனுாருக்கு, முதல்வர் ஸ்டாலின் வருகிறார். ஆனால், அன்றைய தினம், திண்டிவனத்தில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை, 'வீடியோ கான்பரன்ஸ்' வழியே முதல்வர் ஸ்டாலின் திறந்து வைப்பார் என, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச் சர் சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.

அதே நாளில் தீவனுாருக்கு வரும் முதல்வர் ஸ்டாலின், கட்டி முடிக்கப்பட்டுள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையையும், பஸ் நிலையத்தையும் நேரில் வந்து திறந்து வைக்க வேண்டும்.

அதன் வாயிலாக, திண்டிவனத்தின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக உள்ள மூடநம்பிக்கைக்கு முடி வு கட்டி, பகுத்தறிவு பாதையில் தொடரும் இயக்கம் தி.மு.க., என்பதை மெய்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us