ADDED : ஜூலை 04, 2025 01:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழக வெற்றிக் கழகம் என கட்சி ஆரம்பித்துள்ள விஜய், மாலை, 6:00 மணிக்கு மேல் வீட்டை விட்டு வெளியே வர மாட்டார். அது நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும்.
தெருவிற்கு வராத, மக்களுடன் போராடாத ஒரு தலைவர் புதிதாக கட்சி ஆரம்பித்தால், அவர் பின்னால் யாரும் போவது சரியல்ல. இதை இளைஞர்கள் புரிந்து கொண்டுள்ளனர்.
அரசியலில் எம்.ஜி.ஆர்., செயல்பாடு, நிலைப்பாடு, இலக்கு எல்லாமே வேறானது. அவரோடு யாரையும் ஒப்பிடக்கூடாது. தற்போது சிலர் விஜயுடன் ஒப்பிடுகின்றனர். அது சரியல்ல.
நடிகரை நம்பி அரசியல் செய்ய, இளைஞர்கள் போனால், எதிர்காலம் வீணாகும். அதனால், விஜய் கட்சி பக்கம் போய் இளைஞர்கள் எதிர்காலத்தை கெடுத்துக்கொள்ளக்கூடாது.
- பழனியப்பன்,
தி.மு.க., முன்னாள் அமைச்சர்