ADDED : ஜன 28, 2025 08:37 PM
பிரதமர் மோடி தலைமையில் நாட்டின் வளர்ச்சி விகிதம் குறைந்து வருகிறது. மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பே, உலக அளவில் இந்தியா மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இருந்தது.
பொருளாதாரத்தில் நாம் இன்னும் சமநிலையற்றவர்களாகவே இருக்கிறோம். பல துறைகளிலும் இன்னும் நாம் இறக்குமதியைத்தான் நம்பிக் கொண்டிருக்கிறோம். பொருளாதாரம், ராணுவ பாதுகாப்பு போன்றவற்றுக்கு வெளிநாடுகளை சார்ந்து இருக்க வேண்டியுள்ளது. ஆனால், எல்லாவற்றிலும் சுயசார்பு, தன்னிறைவு என்று பேசிக் கொண்டிருக்கிறோம்.
இந்தியா விஸ்வகுருவாக விரும்புகிறது. அப்படி ஆக வேண்டும் என்றால், வருமான வரியை ஒழிப்பதில் இருந்து தொடங்க வேண்டும். வருமான வரிகளால் மக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர். மொழி, ஜாதி எனப் பல்வேறு வகைகளில் பிளவுபட்டுள்ளோம். இதையெல்லாம் சரி செய்தால் மட்டுமே விஸ்வகுரு ஆக முடியும்.
சுப்பிரமணியன் சாமி, பா.ஜ., மூத்த தலைவர்

