சுற்றுலா தலங்களை ஆய்வு செய்வதற்காக ஐ.எப்.எஸ்., குழு வருகை
சுற்றுலா தலங்களை ஆய்வு செய்வதற்காக ஐ.எப்.எஸ்., குழு வருகை
ADDED : ஜன 29, 2025 01:10 AM
சென்னை:தமிழகத்தில் உள்ள பண்பாட்டு சுற்றுலா தலங்களை ஆய்வு செய்வதற்காக, ஐ.எப்.எஸ்., குழுவினர் வந்துள்ளனர்.
இந்திய ஆட்சிப்பணி பிரிவான, ஐ.எப்.எஸ்., அதிகாரிகள் கோபில்லா கிருஷ்ணா ஸ்ரீவத்சவ், கிருஷ்ணகுமார், அனுஜா, சத்யநந்தி, ஹரிசங்கர், அப்துல் பசல், கோகுல் கிருஷ்ணா ஆகியோர் தமிழகம் வந்துள்ளனர்.
இக்குழுவினர், தமிழகத்தில் ஒரு வாரம் தங்கி, தமிழகத்தின் பண்பாட்டு பெருமைகளை விளக்கும் மாமல்லபுரம், மதுரை மீனாட்சி அம்மன் கோவில், ஜல்லிக்கட்டு அரங்கம், கீழடி அருங்காட்சியகம், கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை, தஞ்சாவூர் பெரிய கோவில், கங்கை கொண்ட சோழபுரம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களை ஆய்வு செய்ய உள்ளனர்.
தலைமை செயலகத்தில், நேற்று தலைமைச் செயலர் முருகானந்தத்தை சந்தித்து பேசினார். அப்போது, வருவாய்த்துறை செயலர் அமுதா, மனிதவள மேலாண்மைதுறை செயலர் சமயமூர்த்தி ஆகியோர் உடன் இருந்தனர்.

