பாலியல் வழக்குகள் எஸ்.பி.,க்களுக்கு ஐ.ஜி.,க்கள் உத்தரவு
பாலியல் வழக்குகள் எஸ்.பி.,க்களுக்கு ஐ.ஜி.,க்கள் உத்தரவு
ADDED : ஜன 29, 2025 01:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:அனைத்து மாவட்ட எஸ்.பி.,க்களுக்கும், ஐ.ஜி.,க்கள் பிறப்பித்துள்ள உத்தரவு:
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் ரீதியான குற்றங்கள் குறித்து, உடனடியாக விசாரணையை துவக்க வேண்டும் என, காவல் நிலைய போலீசாருக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
இதுபோன்ற வழக்குகளில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதில் கூட காலதாமதம் செய்யப்படுகிறது. இதனால், நீதிமன்றங்களில் வழக்குகளின் விசாரணையில் தேக்கம் ஏற்படுவது தெரியவருகிறது.
இனியும் அந்த நிலை தொடரக்கூடாது. வழக்கு விசாரணைக்கு தேவையான ஆவணங்களை, எவ்வித தாமதமுமின்றி தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.