sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட எடை குறைவான சக்கர நாற்காலி சென்னை ஐ.ஐ.டி., அறிமுகம்

/

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட எடை குறைவான சக்கர நாற்காலி சென்னை ஐ.ஐ.டி., அறிமுகம்

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட எடை குறைவான சக்கர நாற்காலி சென்னை ஐ.ஐ.டி., அறிமுகம்

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட எடை குறைவான சக்கர நாற்காலி சென்னை ஐ.ஐ.டி., அறிமுகம்

1


UPDATED : ஜூலை 17, 2025 08:36 AM

ADDED : ஜூலை 17, 2025 12:31 AM

Google News

UPDATED : ஜூலை 17, 2025 08:36 AM ADDED : ஜூலை 17, 2025 12:31 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:சென்னை ஐ.ஐ.டி., யுடன் இணைந்து, ஒய்.டி.ஒன்., நிறுவனத்தின் சார்பில், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட, எடை குறைவான, 'மோனோ டியூப் ரிஜிட்' சக்கர நாற்காலியை, இந்திய ராணுவ மருத்துவ சேவைகளுக்கான தலைமை இயக்குநர் 'வைஸ் அட்மிரல்' அனுபம் கபூர் நேற்று அறிமுகம் செய்தார்.

மறுவாழ்வு


சென்னை ஐ.ஐ.டி., யுடன் இணைந்து, ஒய்.டி.ஒன்., நிறுவனத்தின் சார்பில், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட, மிக லேசான, 'மோனோ டியூப் ரிஜிட் பிரேம்' சக்கர நாற்காலியை, இந்திய ராணுவ படைகளின் மருத்துவ சேவைகளுக்கான தலைமை இயக்குநர் அனுபம் கபூர், நேற்று சென்னை ஐ.ஐ.டி.,யில் அறிமுகம் செய்தார்.

நிகழ்ச்சியில், அவர் பேசியதாவது:

ராணுவம் உள்ளிட்ட படையினருக்கு உறுப்பு செயலிழப்புகளால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து மீள்வதுதான், உண்மையான சுதந்திரம் என ஒரு டாக்டராக கூறுவேன்.

நாட்டுக்காக உழைக்கும் ஒரு வீரருக்கான மறுவாழ்வுதான், அவருக்கும், குடும்பத்துக்குமான முழு சுதந்திரம்.

அதற்கான தீர்வை அளிக்க, அறிவு, புதுமை, திறனாய்வு, இரக்கம் உள்ள கண்டுபிடிப்பாளர்களால் தான் முடியும்.

இதுபோன்ற கண்டுபிடிப்புகள், ஆயுதப்படைகளில் வர வேண்டும். ஒவ்வொரு கண்டுபிடிப்பாளரும், தம் சுற்றுப்புற தேவைகளுக்கான தீர்வை அளிக்க முன்வர வேண்டும்.

இயலாதவர்களுக்கான கண்டுபிடிப்பு, அவர்களுக்கான தொண்டு அல்ல; அவர்களை கண்ணியமாக வாழ வைப்பதுடன், அவர்களின் உரிமையை பாதுகாப்பது.

இவ்வாறு அவர் பேசினார்.

கண்டுபிடிப்பு அவசியம்


சென்னை ஐ.ஐ.டி., இயக்குநர் காமகோடி பேசியதாவது:

கடந்த 2014ல், விருது வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, 'நம் ராணுவத்தினரின் சுமையை ஒரு கிலோ குறைப்பதற்கான கண்டுபிடிப்பை செய்வது கூட பெரும் சேவையாக இருக்கும்' என்றார். நாங்கள் இப்போது இயங்கும் சக்கர நாற்காலி கண்டுபிடிப்பில், ஏற்கனவே இருந்த எடையை பாதியாக குறைத்துள்ளோம்.

சென்னை ஐ.ஐ.டி., நிறுவனம், கண்டுபிடிப்புகளுக்காக ஒவ்வொரு ஆண்டும் பல காப்புரிமைகளை பெறுகிறது. கடந்தாண்டில் மட்டும், 417 காப்புரிமைகள் பெறப்பட்டன. நாங்கள் ஒவ்வொரு கண்டுபிடிப்பையும், பணம் சம்பாதிப்பதற்காக செய்வதில்லை.

அவை, சமூகத்தின் தேவையை பூர்த்தி செய்வதாகவும், சமூக முன்னேற்றத்துக்கானதாகவும் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம்.

இந்த நாற்காலி கண்டுபிடிப்பில், உலோகம், ரப்பர் உள்ளிட்ட பலவற்றின் சேர்க்கையும், பலரின் கணித, இயற்பியல், வேதியியல், இயந்திர பொறியியல், மருத்துவ அறிவியல் சார்ந்த திறனும் இணைந்துள்ளது. ஒரு நாட்டின் தேவை இதுதான்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில், சென்னை ஐ.ஐ.டி., இயந்திர பொறியியல் துறை உதவி பேராசிரியர்கள் மனீஷ், ஆனந்த், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழக விஞ்ஞானி ரவீந்திரசிங், 'டிரிம்பிள்' நிறுவனத்தினர் பங்கேற்றனர்.

'அனைத்து துறைகளிலும் கண்டுபிடிப்புகள் அவசியம்'


சென்னை ஐ.ஐ.டி., இயக்குனர் காமகோடி பேசியதாவது:கடந்த 2014ல், விருது வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, 'நம் ராணுவத்தினரின் சுமையை ஒரு கிலோ குறைப்பதற்கான கண்டுபிடிப்பை செய்வது கூட பெரும் சேவையாக இருக்கும்' என்றார்.

நாங்கள் இப்போது இயங்கும் சக்கர நாற்காலி கண்டுபிடிப்பில், ஏற்கனவே இருந்த எடையை பாதியாக குறைத்துள்ளோம்.சென்னை ஐ.ஐ.டி., நிறுவனம், கண்டுபிடிப்புகளுக்காக ஒவ்வொரு ஆண்டும் பல காப்புரிமைகளை பெறுகிறது. கடந்தாண்டில் மட்டும், 417 காப்புரிமைகள் பெறப்பட்டன. நாங்கள் ஒவ்வொரு கண்டுபிடிப்பையும், பணம் சம்பாதிப்பதற்காக செய்வதில்லை. அவை, சமூகத்தின் தேவையை பூர்த்தி செய்வதாகவும், சமூக முன்னேற்றத்துக்கு ஆனதாகவும் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம்.

இந்த நாற்காலி கண்டுபிடிப்பில், உலோகம், ரப்பர் உள்ளிட்ட பலவற்றின் சேர்க்கையும், பலரின் கணித, இயற்பியல், வேதியியல், இயந்திர பொறியியல், மருத்துவ அறிவியல் சார்ந்த திறனும் இணைந்துள்ளது. ஒரு நாட்டின் தேவை இதுதான். இவ்வாறு அவர் பேசினார்.

எடை குறைவு; விலை மலிவு


தற்போது பயன்பாட்டில் உள்ள சக்கர நாற்காலி, 15 - 20 கிலோ எடை உடையது. ஒய்.டி.ஒன்., ஆய்வு குழுவும், சென்னை ஐ.ஐ.டி.,யும் இணைந்து உருவாக்கியுள்ள சக்கர நாற்காலி, 9 கிலோ மட்டுமே எடை உள்ளது. இதனால், வாகனங்களில் எடுத்துச் செல்வது எளிது. எடை குறைவாக இருந்தாலும், கடினத்தன்மை உள்ளதால், பள்ளம் மேடுகளில் ஏறி இறங்கும்போது சேதமடையாது.
இதனால், மாற்றுத்திறன் விளையாட்டு வீரர்களால் எளிதாக கையாள முடியும். இதை, வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்தால், 2.50 லட்சம் ரூபாய்க்கு மேல் செலவாகும். உள்நாட்டிலேயே தயாரிப்பதால், 74,700 ரூபாயாக விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
தற்போது, 20 மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கும் பொறுப்பை, 'ட்ரிம்பிள்' நிறுவனம், தன் சமூக பொறுப்புணர்வு நிதியில் இருந்து வழங்கி உள்ளது.
இதை சந்தைப்படுத்துவதற்காக, ஆர்.ஆர்.டி., சூக்கோ இந்தியா நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த கண்டுபிடிப்பு, மாற்றுத்திறனாளிகளின் தனிப்பட்ட தேவைகளுக்காகவும் மேம்படுத்தப்பட உள்ளது. இது, ராணுவ வீரர்களின் மறுவாழ்வுக்கு மிகுந்த பயன் அளிக்கும்.








      Dinamalar
      Follow us