ADDED : ஜன 23, 2025 12:08 AM
சென்னை:கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், கள்ளச்சாராயம் குடித்து, 68 பேர் பலியான சம்பவம் குறித்து, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, சென்னை சி.பி.ஐ., அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கடந்தாண்டு ஜூன் 19ல், கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம், மாதவச்சேரி மற்றும் சேஷசமுத்திரம் ஆகிய பகுதிகளில், கள்ளச்சாராயம் குடித்து, 229 பேர் பாதிக்கப்பட்டனர். அவர்களில், 68 பேர் உயிரிழந்தனர்; 161 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக, சி.பி.சி.ஐ.டி., போலீசார் வழக்குப் பதிவு செய்து, 24க்கும் மேற்பட்டோரை கைது செய்து, கடலுார் சிறையில் அடைத்துள்ளனர்.
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, இவ்விவகாரத்தில், சென்னை சி.பி.ஐ., அதிகாரிகள் தனித்தனியாக மூன்று வழக்குகள் பதிவு செய்து உள்ளனர். சி.பி.சி.ஐ.டி., வசம் இருந்த ஆவணங்கள், சி.பி.ஐ.,யிடம் ஒப்படைக்கப்பட்டன.