சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கு: மார்ச் 19ல் பொன்முடி நேரில் ஆஜராக உத்தரவு
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கு: மார்ச் 19ல் பொன்முடி நேரில் ஆஜராக உத்தரவு
ADDED : மார் 05, 2025 04:25 PM

சென்னை: சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தொடர்பான வழக்கில் அமைச்சர் பொன்முடி மார்ச் 19ல் நேரில் ஆஜராக சென்னை சி.பி.ஐ., சிறப்பு கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2006-2011 ல் திமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த பொன்முடி மீது ரூ.28.26 கோடி அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குபதிவு செய்திருந்தது.
இந்த வழக்கில் அமலாக்கத்துறை தரப்பில் கூடுதல் குற்றப்பத்திரிகை மற்றும் 26 கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்தது. இதில் அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி உள்ளிட்டோர் சட்டவிரோதமாக பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டுள்ளதாக குற்றப்பத்திரிகையில் அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது.
இந்த கூடுதல் குற்றப்பத்திரிகை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்ற நீதிபதி எழில் வேலவன், பொன்முடி, அவரது மகன்கள் கவுதம சிகாமணி, அசோக் சிகாமணி உள்ளிட்டோர் மார்ச்-19 அன்று நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளார்.