sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 30, 2026 ,பங்குனி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

முறைகேடாக இயங்கிய கிராவல் குவாரிக்கு 'சீல்'

/

முறைகேடாக இயங்கிய கிராவல் குவாரிக்கு 'சீல்'

முறைகேடாக இயங்கிய கிராவல் குவாரிக்கு 'சீல்'

முறைகேடாக இயங்கிய கிராவல் குவாரிக்கு 'சீல்'


ADDED : மே 31, 2025 05:20 AM

Google News

ADDED : மே 31, 2025 05:20 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நடுவீரப்பட்டு : சி.என்.பாளையத்தில் முறைகேடாக இயங்கிய கிராவல் குவாரியை சீல் வைக்க ஆர்.டி.ஓ., உத்தரவிட்டார்.

நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையத்தில் கிராவல் குவாரிகள் இயங்கி வருகிறது. இங்கு முறைகேடுகள் நடப்பதாக கடலுார் ஆர்.டி.ஓ., அலுவலகத்திற்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், சி.என்.பாளையத்தில் விலங்கல்பட்டைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரின் குவாரியில் ஆர்.டி.ஓ., அபிநயா தலைமையில் நெல்லிக்குப்பம் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், வருவாய் ஆய்வாளர் வெங்கடேசன் ஆய்வு செய்தனர்.

இதில், குவாரியின் பக்கத்து நிலத்திற்கும், குவாரிக்கும் இடையே அளவீடு கல் பதித்து வேலி அமைக்காதது. அனுமதிக்கப்பட்ட ஆழத்திற்கு மேல் அதிகளவு கிராவ் எடுத்தது. அனுமதி வழங்கப்பட்ட ஊர்களுக்கு கிராவல் அனுப்பாமல்,அனுமதியில்லாத ஊர்களுக்கு அனுப்பியது. லாரிகளில் அளவுக்கு அதிகமாக கிராவல் ஏற்றி அனுப்பியது என, முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து ஆர்.டி.ஓ.,அபிநயா, குவாரிக்கு சீல் வைக்கவும், அனுமதியின்றி கிராவல் அள்ள பயன்படுத்திய ஹிட்டாச்சி, 3 டிப்பர் லாரிகளை பறிமுதல் செய்ய உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us