தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/மக்கள் தொகை கணக்கெடுப்பில்

மக்கள் தொகை கணக்கெடுப்பில்

மக்கள் தொகை கணக்கெடுப்பில்


ADDED : அக் 17, 2026 12:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 17, 2026 12:02 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மக்கள் தொகை கணக்கெடுப்பில்

1.61 லட்சம் பணியாளர்கள்

சென்னை: ‘மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில், 1.61 லட்சம் பணியாளர்கள் ஈடுபட உள்ளனர். இதற்கு, பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்’ என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.

நாடு முழுதும், மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி, 2027 பிப்ரவரி மாதம் நடக்கிறது.

அதன் முன்னோட்டமாக, வீட்டு பட்டியல் கணக்கெடுப்பு மற்றும் சுய விபரங்கள் பதிவேற்றம் முடிந்துள்ளன.

இந்நிலையில், மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில், 1.61 லட்சம் பணியாளர்கள் ஈடுபட போவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, வருவாய் நிர்வாக துறை, சமூக பாதுகாப்பு திட்டங்கள் இயக்குநர் வெளியிட்டு உள்ள அறிக்கை:

தமிழகம் முழுதும், 2027ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில், ஒரு லட்சத்து 41 ஆயிரத்து 083 கணக்கெடுப்பாளர்கள், 20 ஆயிரத்து 467 மேற்பார்வையாளர்கள் என, மொத்தம் 1.61 லட்சத்திற்கும் அதிகமான பணியாளர்கள் ஈடுபட உள்ளனர்.

பொது மக்கள் முழுமையான விபரங்களை வழங்கி, முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us