ADDED : அக் 17, 2026 12:02 AM
ஒன்பது மாவட்ட உள்ளாட்சி பதவிகள் 19ல் நிறைவு
சென்னை: தமிழகத்தில், 27 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல், 2019ம் ஆண்டு நடந்தது. இதில், தேர்வு செய்யப்பட்ட, 1.18 லட்சம் உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக் காலம், 2025 ஜனவரி மாதம் நிறைவு பெற்றது.
புதிதாக பிரிக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தல், 2021ம் ஆண்டு நடந்தது. இந்த தேர்தலில், 74 ஊராட்சி ஒன்றியத் தலைவர்கள், 140 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 2,901 ஊராட்சி தலைவர்கள் உட்பட, 27 ஆயிரத்து 003 பேர் ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகளாக, 2021 அக்டோபர், 20ம் தேதி பதவி ஏற்றனர். அதன்படி, வரும் 19ம் தேதியுடன், இந்த ஒன்பது மாவட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான பதவிக் காலம் நிறைவடைகிறது.
புதிதாக பொறுப்பேற்றுள்ள த.வெ.க., கூட்டணி அரசு, 38 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலை ஒரே நேரத்தில் நடத்த திட்டமிடுகிறது. அதற்கான பணிகளையும் செய்து வருகிறது.
