ADDED : ஜூன் 20, 2026 08:08 AM

விழுப்புரம்: விழுப்புரம் ஜான்டூயி இன்டர்நேஷனல் சி.பி.எஸ்.இ., பள்ளியில் மாணவர் தலைமை பதவியேற்பு விழா நடந்தது.
பள்ளி தாளாளர் வீரதாஸ் தலைமை தாங்கினார். வளவனுார் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன்,சப் இன்ஸ்பெக்டர் பாலசிங்கம் சிறப்புரையாற்றினர்.
மாணவர் தலைவர், தலைவி, கலை மற்றும் இலக்கிய தலைவர், நன்னடத்தைத் தலைவர், விளையாட்டுத் தலைவர் ஆகியோர் பதவியேற்று உறுதிமொழியேற்றனர்.
2025-26ம் கல்வி ஆண்டில் 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பில் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்றதற்காக ஆசிரியர்களுக்கு பரிசு மற்றும் பத்தாம் வகுப்பில் தமிழில் 100க்கு100 மதிப்பெண் பெற்ற மாணவிக்கு பரிசுத் தொகை வழங்கி பள்ளி தாளாளர் பாராட்டினார்.
கல்வி நிர்வாக இயக்குநர் எமர்சன் ராபின், நிர்வாகத் தலைவர் வாலண்டினா லெஸ்லி, கல்வி நிர்வாக தலைவர் சுகன்யா, பள்ளி இணைச் செயலாளர் நித்தின் ஜோஷ்வா, பள்ளி முதல்வர் விஜயா, துணை முதல்வர் தனலட்சுமி மற்றும் பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
