ADDED : ஜன 28, 2025 05:57 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை : மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், சென்னையில் நேற்று அளித்த பேட்டி:
அரசு மருத்துவமனை யில் 2,553 மருத்துவ பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு, 24,000 பேர் தேர்வு எழுதியுள்ளனர். விடைத் தாள்களை திருத்தும் பணி நடந்து வருகிறது.
கொரோனா காலத்தில் பணியாற்றிய டாக்டர்களுக்கு, அவர்களின் பணிக்காலத்திற்கு ஏற்ப, 2 முதல் 5 மதிப்பெண் வரை, ஊக்க மதிப்பெண் வழங்கப்படும்.
தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு, 10 நாட்களில், டாக்டர்களுக்கு பணி ஆணை வழங்கப்படும். புதிய மருத்துவக் கல்லுாரி உட்பட பல்வேறு கோரிக்கைகளுக்காக, பிப்., 5ம் தேதி மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் நட்டாவை சந்திக்க உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.