ADDED : ஏப் 10, 2025 06:11 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை : டில்லியில் நடந்த 'கேலோ இந்தியா பாரா விளையாட்டு' போட்டியில், தமிழகத்தை சேர்ந்த, 190 பாரா வீரர் - வீராங்கனையர் பங்கேற்றனர்.
தடகளம், பளு துாக்குதல், டேபிள் டென்னிஸ், பேட்மின்டன், வில்வித்தை போன்ற பிரிவுகளில் போட்டியிட்டனர்.
போட்டியில் தமிழக அணி, 28 தங்கம், 19 வெள்ளி, 27 வெண்கலம் வென்று, தேசிய அளவில் இரண்டாம் இடம் பெற்றது.
வீரர்களை பாராட்டி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், நேற்று பதக்கம் வென்ற, 62 வீரர் - வீராங்கனையருக்கு, 1.12 கோடி ரூபாய், உயரிய ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டது. சென்னை, நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடந்த நிகழ்ச்சியில், துணை முதல்வர் உதயநிதி, உயரிய ஊக்கத்தொகையை வழங்கினார்.