இடைவிடாத மழை; மயிலாடுதுறை, நாகை, திருவாரூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
இடைவிடாத மழை; மயிலாடுதுறை, நாகை, திருவாரூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
UPDATED : நவ 26, 2024 06:37 AM
ADDED : நவ 26, 2024 06:32 AM

சென்னை: அதி கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்ததையடுத்து மயிலாடுதுறை, நாகை, திருவாரூரில் இன்று (நவ.,26) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூரில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (நவ.,26) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. இதனால், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களுக்கு, அதி கன மழைக்கான 'ரெட் அலெர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று முதலே நாகை மாவட்டத்தில் நாகூர், வாஞ்சூர், வடகுடி, பனங்குடி, புத்தூர் உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. திருவாரூரில் மாவட்டத்திலும் மிதமான மழை பெய்து வருகிறது. கனமழை முன்னெச்சரிக்கை காரணமாக, அந்தந்த மாவட்டங்களில் முடிவெடுத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடலாம் என அரசு அறிவித்துள்ளது.
* அதன்படி மயிலாடுதுறை, நாகை, திருவாரூரில் இன்று (நவ.,26) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
*தஞ்சாவூர் மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து, கலெக்டர் பிரியங்கா பங்கஜம் உத்தரவிட்டார்.
* காரைக்காலில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருவதால், அங்கு பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.