ஈரோடு மாவட்டத்தில் 3ம் நாளாக வருமான வரித்துறை சோதனை
ஈரோடு மாவட்டத்தில் 3ம் நாளாக வருமான வரித்துறை சோதனை
ADDED : ஜன 09, 2025 11:11 PM
ஈரோடு:ஈரோடு, அவல்பூந்துறை பகுதியை சேர்ந்த கட்டட ஒப்பந்ததாரர் ராமலிங்கம். இவருக்கு சொந்தமாக என்.ஆர்.கட்டுமான நிறுவனம், டோல் பிளாசா, திருமண மண்டபம், ஸ்டார்ச் மாவு ஆலை உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் உள்ளன.
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியின் உறவினரான இவருக்கு சொந்தமாக, ஈரோட்டை தலைமையிடமாக கொண்டு செயல்படும் என்.ஆர்., கட்டுமான நிறுவன அலுவலகம், ராமலிங்கம் வீடு, பூந்துறை சாலையில் உள்ள என்.ஆர். திருமண மண்டபம்.
மேலும், முள்ளாம்பரப்பில் செயல்படும் ஆர்.பி.பி., கட்டுமான நிறுவனம் ஆகியவற்றில் கடந்த, 7ம் தேதி முதல் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர். அம்மாபேட்டை அடுத்த பூனாச்சியில் உள்ள ராமலிங்கத்துக்கு சொந்தமான மரவள்ளி கிழங்கு அரவை ஆலையிலும், 7ம் தேதி முதல் சோதனை நடக்கிறது.
இந்த இடங்களில், மூன்றாம் நாளாக நேற்றும், வருமான வரித்துறை சோதனை தொடர்ந்தது.

