UPDATED : செப் 23, 2025 12:46 PM
ADDED : செப் 23, 2025 12:31 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: நாமக்கல்லில் கோழிப் பண்ணை உரிமையாளர் வாங்கிலி சுப்பிரமணியன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல்லில் தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் மார்கெட்டிங் சொசைட்டி தலைவர் வாங்கிலி சுப்ரமணியம் வீடு, அலுவலகம், நிதிநிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தினர்.
நாமக்கல், ஈரோடு, காங்கேயம், உடுமலை உள்ளிட்ட இடங்களில் செயல்படும் கோழிப்பண்ணை, தீவனம் தயாரிப்பு நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
உடுமலை உட்பட தமிழகத்தின் வேறு சில நகரங்களிலும் கோழிப்பண்ணை தொழில் செய்வோர் அலுவலகங்களிலும் வருமானவரித் துறையினர் ஆய்வு நடத்தி வருகின்றனர்.