ADDED : ஜன 10, 2024 12:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்போரூர்:செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் அருகே தண்டலத்தில், ஆந்திராவை தலைமையிடமாக கொண்ட தனியார் நிறுவனம், 20 ஆண்டுகளாக செயல்படுகிறது. 'ஏசி'யில் பயன்படுத்தப்படும், காஸ், இந்நிறுவன சிலிண்டர்களில் அடைத்து வெளி மாநில தொழிற்சாலைகளுக்கு அனுப்பப்படுகிறது.
இந்நிறுவனத்தில், வருமான வரித்துறையினர் நேற்று சோதனை நடத்தினர். ஆறு அதிகாரிகள், துப்பாக்கிய ஏந்திய மத்திய தொழில் பாதுகாப்பு படை போலீசாருடன் வந்து, நிறுவன ஊழியர்களின் தொலை தொடர்பு சேவையை துண்டித்தனர். பின், மேலாளர் மற்றும் முக்கிய ஊழியர்களிடம் விசாரணை செய்தனர்.
முக்கிய ஆவணங்கள், வங்கி கணக்கு விபரங்கள் உள்ளிட்டவற்றையும் ஆய்வு செய்தனர்.

