ADDED : நவ 11, 2024 11:24 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சென்னை நந்தனத்தில், வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி தலைமையில், துறை ஆய்வுக்கூட்டம் நேற்று நடந்தது.
கூட்டத்தில் அவர் பேசுகையில், “வணிக வரித்துறையின் வருவாய், கடந்த நிதியாண்டில் ஏப்ரல் முதல் அக்டோபர் வரை, 70,543 கோடி ரூபாயாக இருந்தது. நடப்பாண்டு இதே கால கட்டத்தில், 79,772 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
“கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு, 9,229 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது. இந்திய அளவில், ஜி.எஸ்.டி., வருவாய் வளர்ச்சி, 11.59 சதவீதமாகவும், தமிழகத்தில், 19.39 சதவீதமாகவும் உள்ளது.
“இணை ஆணையர்கள், நவீன தொழில்நுட்பம் மற்றும் தரவுகளை பயன்படுத்தி, வணிக வரித்துறை வருவாயை மேலும் அதிகரிக்க, ஆக்கப் பூர்வமாக செயலாற்ற வேண்டும்,” என்றார்.