தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ கொப்பரை கொள்முதல் ஆதரவு விலை உயர்வு

கொப்பரை கொள்முதல் ஆதரவு விலை உயர்வு

கொப்பரை கொள்முதல் ஆதரவு விலை உயர்வு


ADDED : டிச 21, 2024 10:53 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 21, 2024 10:53 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:வரும், 2025 பருவத்தில் கொப்பரை கொள்முதலுக்காக குறைந்தபட்ச ஆதரவு விலையை, மத்திய அரசு உயர்த்தியுள்ளது.

அதன்படி, அரைப்பதற்கான கொப்பரைக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையாக குவின்டாலுக்கு, 11,582 ரூபாயும், பந்து கொப்பரைக்கு குவிண்டாலுக்கு, 12,100 ரூபாயும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. தற்போது முறையே, 11,160 ரூபாயாகவும், 12,000 ரூபாயாகவும் உள்ளது.

தேசிய வேளாண் கூட்டுறவு விற்பனை கூட்டமைப்பு, தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு ஆகியவை, ஆதரவு விலை திட்டத்தின் கீழ் கொப்பரை கொள்முதல் செய்வதற்கான மத்திய அரசின் ஒருங்கிணைப்பு முகமைகளாக செயல்படுகின்றன.

இதுகுறித்து, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை அறிக்கையில், 'நாட்டிலேயே, 25.70 சதவீத தென்னை விவசாயிகள் தமிழகத்தில் உள்ளனர்.

'இந்நிலையில், கொப்பரை கொள்முதலுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்வு, தமிழக விவசாயிகளுக்கு பயன் அளிக்கும். அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதுடன், சிறந்த வருமானத்தை உறுதி செய்யும்' என்று தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us