ADDED : ஜன 18, 2024 02:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:சாலை விபத்தில் சிக்கியவர்களுக்கு, காப்பீடு தொகை வழங்க, காப்பீடு நிறுவனங்கள், விபத்து தொடர்பான ஆவணங்களை, காவல் துறை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்கின்றன. இதற்கு காவல்துறை சார்பில், 100 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இக்கட்டணத்தை, 125 ரூபாயாக உயர்த்தி வசூலிக்க அனுமதி அளிக்கும்படி, டி.ஜி.பி., அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார். அதை பரிசீலனை செய்த அரசு, ஒரு ஆவணத்திற்கு, தற்போது வசூலிக்கப்படும் 100 ரூபாயை, 125 ரூபாயாக உயர்த்தி வசூலிக்க அனுமதி அளித்து உள்ளது.
இதற்கான அரசாணையை, உள்துறை செயலர் அமுதா வெளியிட்டுள்ளார்.