sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கழுகுகள் எண்ணிக்கை அதிகரிப்பு வனத்துறை கணக்கெடுப்பில் தகவல்

/

கழுகுகள் எண்ணிக்கை அதிகரிப்பு வனத்துறை கணக்கெடுப்பில் தகவல்

கழுகுகள் எண்ணிக்கை அதிகரிப்பு வனத்துறை கணக்கெடுப்பில் தகவல்

கழுகுகள் எண்ணிக்கை அதிகரிப்பு வனத்துறை கணக்கெடுப்பில் தகவல்


ADDED : ஜன 26, 2024 01:43 AM

Google News

ADDED : ஜன 26, 2024 01:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:தமிழகத்தில் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த கணக்கெடுப்பு வாயிலாக, கழுகுகள் எண்ணிக்கை, 320 ஆக அதிகரித்துள்ளது.

வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை செயலர் சுப்ரியா சாஹு நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் முதுமலை, சத்தியமங்கலம் புலிகள் காப்பகங்கள்; கர்நாடக மாநிலத்தில் பந்திப்பூர், நாகர் ேஹால் புலிகள் காப்பகங்கள்; கேரளாவில் வயநாடு வன உயிரின காப்பகம் ஆகிய இடங்களில், 2023 பிப்., 25, 26 தேதிகளில் ஒருங்கிணைந்த கழுகுகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், மொத்தம் 246 கழுகுகள் இருப்பதாக தெரியவந்தது.

இதையடுத்து, 2023, டிச., 30, 31 ஆகிய தேதிகளில், தமிழகம், கேரளம், கர்நாடக வனப் பகுதிகளில் ஒருங்கிணைந்த கழுகுகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதில், ஐந்து வகைகளில் மொத்தம், 320 கழுகுகள் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

இதில் வெண்ணிற கழுகுகள், 217; நீண்ட பில்ட் கழுகு, 47; சிவப்பு தலை கழுகு, 50; எகிப்தியன் கழுகு, 4; இமாலய கழுகு, 2 என மொத்தம், 320 கழுகுகள் இருப்பது கணக்கெடுப்பு வாயிலாக உறுதியாகிறது.

கால்நடை மருத்துவ சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும், 'டிக்ளோ பெனாக்' மருந்து, கழுகுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதால், இதன் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது.

தடையை மீறி விற்றவர்கள் மீது, 104 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மேலும், கழுகுகளின் தேவை கருதி, காட்டில் இறக்கும் விலங்குகளின் உடல்களை புதைக்காமல், வெட்ட வெளியில் போட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கழுகுகள் கணக்கெடுப்பு விபரம்


பகுதி / எண்ணிக்கைமுதுமலை புலிகள் காப்பகம் / 78சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் / 70பந்திப்பூர் புலிகள் காப்பகம் / 65பில்லிகிரி புலிகள் காப்பகம் / 14நாகர் ேஹால் புலிகள் காப்பகம் / 38வயநாடு வன உயிரின காப்பகம் / 51திருநெல்வேலி வனப் பகுதி / 4மொத்தம் / 320-








      Dinamalar
      Follow us