ADDED : ஜன 31, 2024 02:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னைர்:தமிழகத்தில் பனிக்காலம் இறுதி கட்டத்தை எட்ட தொடங்கிய நிலையில் கோடை வெயில் தீவிரம் படிப்படியாக அதிகரிப்பதால் அதற்கேற்ப வீடுகள், வேளாண் பணிகளுக்கு மின்தேவை அதிகரித்துள்ளது.
ஜன.26ல் 14,332 மெகாவாட்டாக இருந்த தமிழக மின்நுகர்வு, மறுநாள், 15,886 மெகாவாட், நேற்று முன்தினம், 16,274 மெகாவாட்டாக அதிகரித்தது.
நேற்று சராசரி மின்நுகர்வு 16,149 மெகாவாட்டாக இருந்தது. வரும் நாட்களில் வெயில் தாக்கம் அதிகரிக்கும் என்பதால் அதற்கேற்ப மின் நுகர்வு உயர வாய்ப்புள்ளதாக, மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.