தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ பாலியல் தொல்லை அதிகரிப்பு: திருமாவளவன்

பாலியல் தொல்லை அதிகரிப்பு: திருமாவளவன்

பாலியல் தொல்லை அதிகரிப்பு: திருமாவளவன்


ADDED : பிப் 07, 2025 10:27 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 07, 2025 10:27 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:''தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலும் பாலியல் தொல்லை அதிகரித்துள்ளது,'' என, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறினார்.

அவர் அளித்த பேட்டி:

தமிழகம் மட்டுமின்றி, அனைத்து மாநிலங்களிலும் பாலியல் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. சமூக ஊடகங்களில், இன்றைக்கு பாலியல் தொடர்பான வீடியோக்கள் பரப்பப்பட்டு வருகின்றன. இவற்றை கட்டுப்படுத்த, மத்திய, மாநில அரசுகள் முயற்சி மேற்கொள்ளவில்லை என்பது வேதனையளிக்கிறது.

இவ்வாறு கட்டுப்பாடற்ற சமூக ஊடக சுதந்திரம் உள்ளிட்டவையே, விரும்பத்தகாத சம்பவங்களுக்கு காரணம். இதற்காக, தேசிய அளவில் கொள்கை வரையறுக்கப்பட வேண்டும். தமிழக அரசும் கடும் நடவடிக்கைகள் மேற்கொண்டு, குற்றம் அதிகரிக்காமல் தடுக்க வேண்டும்.

ஜாதிவாரி கணக்கெடுப்பு அவசியம். மாநில அரசு எடுத்தால், ஆய்வு என்றே பார்க்கப்படும். மத்திய அரசு எடுத்தால், அதிகாரப்பூர்மானதாக இருக்கும். அதேநேரம், மாநில அரசும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us