அணைகளில் நீர் அதிகரிப்பு 200 கோடி யூனிட் மின்சார கிடைக்கும்
அணைகளில் நீர் அதிகரிப்பு 200 கோடி யூனிட் மின்சார கிடைக்கும்
ADDED : ஜூலை 05, 2025 06:47 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:மின் வாரிய அணைகளுக்கு, தண்ணீர் வரத்து அதிகம் உள்ளதால், 200 கோடி யூனிட்கள் மின் உற்பத்தி செய்யும் அளவுக்கு, தண்ணீர் இருப்பு உள்ளது.
இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
நீர்ப்பாசனம், நீர்ப்பாசனம் அல்லாத பிரிவில் உள்ள, 25 பெரிய அணைகளில் தண்ணீர் வருவதை பொறுத்து தான், நீர் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்த அணைகளில் முழு கொள்ளளவுக்கு தண்ணீர் இருந்தால், அதை பயன்படுத்தி, 243 கோடி யூனிட்களுக்கு, மின் உற்பத்தி செய்ய முடியும்.
தற்போது, 200 கோடி யூனிட் வரை, மின் உற்பத்தி செய்வதற்கான தண்ணீர் வந்துள்ளது.
இதனால் அந்த தண்ணீரை பயன்படுத்தி, தினமும் 3 கோடி யூனிட் வரை, மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இது, கடந்த மாதத்தில், 1 கோடி யூனிட்டுக்கு கீழ் இருந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.