ADDED : ஏப் 12, 2025 01:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொ.ம.தே.க., பொதுச்செயலர் ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கை:
பொதுவெளியில் அமைச்சர் பொன்முடி, பெண்கள் பற்றி ஆபாசமாக, அநாகரிகமாக பேசியதை கண்டிக்கிறோம். நீண்ட அனுபவம் பெற்ற மூத்த அமைச்சராக இருக்கிற ஒருவர், இந்த அளவிற்கு தரம் தாழ்ந்து, பொதுக்கூட்டத்தில் பேசியிருப்பது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்.
இந்தப் பேச்சு, தமிழக முதல்வருக்கு சங்கடத்தை கொடுத்திருக்கும். உயர் பொறுப்பில் இருப்பவர்கள் கருத்துகளை தெரிவிக்கும்போது, எந்த ஒருசாரரின் மனமும் புண்படும் அளவுக்கு பேசக்கூடாது.
அரசியல் ரீதியாக விமர்சனம் செய்வதிலோ, எதிர்கருத்துகளை பேசுவதிலோ எந்த பிரச்னையும் இல்லை. ஆனால் பயன்படுத்துகிற வார்த்தைகள், ஆபாசமாகவோ அடுத்தவர் மனதை புண்படுத்துகிற விதத்திலோ இருக்கக் கூடாது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

