புதுச்சேரியில் 'இண்டி' கூட்டணி உறுதி ரவிக்குமார் எம்.பி., பேட்டி
புதுச்சேரியில் 'இண்டி' கூட்டணி உறுதி ரவிக்குமார் எம்.பி., பேட்டி
ADDED : மார் 22, 2026 05:55 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் இண்டி கூட்டணி உறுதியாகிவிட்டது, இன்று தொகுதிகள் அறிவிக்கப்படும் என, ரவிக்குமார் எம்.பி., தெரிவித்தார்.
புதுச்சேரியில் உள்ள தனியார் ஓட்டலில், இண்டி கூட்டணி தொகுதி பங்கீடு குறித்து புதுச்சேரி மாநில தி.மு.க., பொறுப்பாளர் ஜெகத்ரட்சகனை சந்தித்து வி.சி., கட்சிக்கான தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்திவிட்டு வந்த அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமார் எம்.பி., கூறியதாவது:
புதுச்சேரியில் காங்., - தி.மு.க., கூட்டணி உறுதியாக அமையும். ஓரிரு மணி நேரத்தில் பேச்சுவார்த்தை முடியும். வி.சி.,க்கு 3 தொகுதி கேட்டுள்ளோம். உரிய தொகுதி கிடைக்கும். திங்கட்கிழமை நாளை மனுத்தாக்கலுக்கு இறுதி நாள்.
அதனால், இன்றைய தினமே தொகுதிகள் அறிவிக்கப்படும். நிச்சயமாக புதுச்சேரியில் காங்., - தி.மு.க., கூட்டணி ஆட்சி அமைக்கும்.
கூட்டணிக்கு யார் தலைமை என்பது முக்கியமல்ல. ஆட்சி அமைய வேண்டும் என்பதே முக்கியம்.
மதச்சார்பின்மை தான் இந்த கூட்டணிக்கு கோட்பாடு. இதை ஏற்று கொள்ளும் அனைவரும் தலைமை ஏற்பவர்கள்' என்றார்.
