sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 30, 2026 ,பங்குனி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கூட்டணியில் காங்கிரசை இழிவாக பேசும்முறை தொடர்வது நல்லதல்ல; மீண்டும் கொளுத்தி போட்ட மாணிக்கம் தாகூர்

/

கூட்டணியில் காங்கிரசை இழிவாக பேசும்முறை தொடர்வது நல்லதல்ல; மீண்டும் கொளுத்தி போட்ட மாணிக்கம் தாகூர்

கூட்டணியில் காங்கிரசை இழிவாக பேசும்முறை தொடர்வது நல்லதல்ல; மீண்டும் கொளுத்தி போட்ட மாணிக்கம் தாகூர்

கூட்டணியில் காங்கிரசை இழிவாக பேசும்முறை தொடர்வது நல்லதல்ல; மீண்டும் கொளுத்தி போட்ட மாணிக்கம் தாகூர்

19


UPDATED : பிப் 06, 2026 08:09 PM

ADDED : பிப் 06, 2026 02:59 PM

Google News

19

UPDATED : பிப் 06, 2026 08:09 PM ADDED : பிப் 06, 2026 02:59 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: கூட்டணியில் காங்கிரசை இழிவாக பேசும்முறை தொடர்வது நல்லதல்ல என்று காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கூறி உள்ளார்.

தமிழகத்தில் இண்டி கூட்டணிக்கு திமுக தான் தலைமை என்றபோதிலும், புதுச்சேரியில் கூட்டணிக்கு காங்கிரஸ் தான் தலைமை வகித்து வருகிறது. இப்படிப்பட்ட அரசியல் சூழலில் கூட்டணியின் தலைமையான காங்கிரசை தவிர்த்துவிட்டு இண்டி கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளுடன் திமுக அண்மையில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை தொடங்கியது. இதில் காங்கிரசுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

பேச்சுவார்த்தையின் போது கலந்து கொண்ட அனைத்துக் கட்சிகளுமே புதுச்சேரியில் இண்டி கூட்டணிக்கு திமுகவை தலைமையேற்குமாறு வலியுறுத்தி இருக்கின்றன. இந்த விவகாரத்தில் திமுகவின் செயலுக்கு நாராயணசாமி அதிருப்தியை வெளியிட்டு இருந்தார்.

மேலும், புதுச்சேரியில் காங்கிரஸ்-திமுக கூட்டணி இடையேயான உரசல்கள் குறித்தும் செய்திகள் நாளிதழ்களிலும் வெளியாகின. இந் நிலையில் புதுச்சேரி அரசியல் நிலவரத்தை சுட்டிக்காட்டி காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர், கூட்டணியில் காங்கிரசை இழிவாக பேசும் முறை தொடர்வது நல்லதல்ல என்று கூறி உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவு விவரம்;

கூட்டணியில் 8 % ஒட்டு வைத்து உள்ள கட்சி தலைமை தாங்குமா, இல்ல 26% உள்ள கட்சி தலைமை தாங்குமா்? ஏன் கூட்டணியில் காங்கிரஸ் கட்சியை இழிவாக பேச வேண்டும்? தொடரும் இந்த முறை நல்லது இல்ல .

இவ்வாறு அந்த பதிவில் மாணிக்கம் தாகூர் குறிப்பிட்டு உள்ளார்.






      Dinamalar
      Follow us