sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத திமுக ஆட்சி; நயினார் நாகேந்திரன்

/

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத திமுக ஆட்சி; நயினார் நாகேந்திரன்

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத திமுக ஆட்சி; நயினார் நாகேந்திரன்

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத திமுக ஆட்சி; நயினார் நாகேந்திரன்


ADDED : பிப் 06, 2026 03:40 PM

Google News

ADDED : பிப் 06, 2026 03:40 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தமிழக பெண்களுக்கும், தமிழகத்திற்கு வரும் பெண்களுக்கும் பாதுகாப்பில்லாத திமுக ஆட்சி நடப்பதாக தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டி உள்ளார்.

இது குறித்து அவரது அறிக்கை;

திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே அடையக்கருங்குளத்தில் உள்ள செங்கல் சூளையில் பணிபுரிந்து வரும் வடமாநிலப் பெண் ஒருவருக்கு, சூளைக்குள் வைத்தே பாலியல் வன்கொடுமை கொடுத்த வழக்கில் இருவர் கைதாகியிருப்பதாக வெளியாகியுள்ள செய்தி கடும் அதிர்ச்சியளிக்கிறது.

கடந்த ஐந்தாண்டு கால திமுக ஆட்சியில் பெண்களுக்கெதிரான பாலியல் வன்கொடுமைகளும், கைதுகளும் தான் நாளுக்கு நாள் பெருகி வருகின்றனவே தவிர, குற்றங்கள் ஏனோ குறைந்தபாடில்லை. அதிலும் குறிப்பாக திமுக ஆட்சியில் வடமாநிலப் பெண்கள் மீதும் வடமாநிலத் தொழிலாளர்கள் மீதும் தொடரும் வன்முறையானது, வரம்பின்றி நீண்டு கொண்டிருக்கிறது.

பொதுவெளியில் கொஞ்சம் கூட தார்மீக பொறுப்பின்றி வட இந்தியர்களை வடக்கன், பானிபூரி விற்பவன், டேபிள் துடைப்பவன் என திமுக தலைவர்கள் தொடர்ந்து இழிவாகப் பேசுவது தான் இது போன்ற குற்றச் சம்பவங்களுக்கான தூண்டுகோல் என்பதை ஆளும் தலைமை இன்னும் உணர்ந்து கொள்ளாதது அறியாமையின் உச்சம்.

வேற்றுமையில் ஒற்றுமையைப் போற்றும் நமது பாரதத்தில், தமிழகத்தில் மட்டும் மற்ற மாநிலத்தவர்களை மாற்றாந்தாய் மனப்போக்குடன் அணுகும் திமுகவின் பிளவுவாத அரசியலுக்கு சமாதி கட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது.

இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us