‛இண்டியா' கூட்டம்: டில்லி புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்
‛இண்டியா' கூட்டம்: டில்லி புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்
UPDATED : ஜூன் 05, 2024 09:26 AM
ADDED : ஜூன் 05, 2024 05:51 AM

சென்னை: இண்டியா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்க, முதல்வர் ஸ்டாலின் டில்லி புறப்பட்டு சென்றார்.
முதல்வர் அளித்த பேட்டி: தி.மு.க., கூட்டணி வெற்றி வரலாற்று சிறப்புமிக்கதாக அமைந்துள்ளது. இந்திய ஜனநாயகத்தையும், அரசியல் சாசனத்தையும் காக்க, அரசியல் செயல்பாடுகளை தொடர்ந்து தி.மு.க., முன்னெடுக்கும். இந்த வெற்றியை, 50 ஆண்டு காலம் தி.மு.க.,வை கட்டிக்காத்த கருணாநிதிக்கு காணிக்கையாக்குகிறேன். பிரதமர் பதவி குறித்து, ஏற்கனவே கருணாநிதி சொன்னது போல், என் உயரம் எனக்கு தெரியும். தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளிவந்த பின், பிரதமர் கருத்து குறித்து பேசலாம்.
கருத்துக்கணிப்பு
பிரதமர் மோடியின் எதிர்ப்பு அலை, இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருக்கிறது. தமிழகத்தில் முழு அளவில் எதிர்ப்பு இருக்கிறது என்பதற்கு, தேர்தல் வெற்றி ஒரு எடுத்துக்காட்டு. ஒடிசாவில் தமிழர்களை கேவலப்படுத்தி, பிரதமர் மோடி பேசினார். வெறுப்பு பிரசாரத்திற்கு எதிராக, மக்கள் ஓட்டு அளித்துள்ளனர். இண்டியா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் டில்லியில் இன்று கூடுகின்றனர். நானும் அக்கூட்டத்திற்கு செல்கிறேன். கருத்துக்கணிப்பு என்ற பெயரில், உளவியல் ரீதியான தாக்குதலை பா.ஜ., தொடுத்தது. அதை இண்டியா கூட்டணி தகர்த்தெறிந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.