UPDATED : ஆக 16, 2025 11:26 PM
ADDED : ஆக 16, 2025 11:22 PM

புதுடில்லி: இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் தள்ளி வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா-பிரிட்டன் உடன் ஒரு சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளது. இந்த, உத்வேகத்தைப் பயன்படுத்தி அமெரிக்கா மற்றும் பிற முக்கிய நாடுகளுடன் ஒப்பந்தங்கள் மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதையடுத்து அமெரிக்காகவுடனும் வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்த இந்தியா திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக குழுவினர் இந்தியா வருகைதர உள்ளனர்.
இது தொடர்பாக, மத்திய வர்த்தக துறை அமைச்சர் பியூஷ் கோயல் கடந்த சில நாட்களுக்கு முன் கூறுகையில், அமெரிக்காவுடனான எங்கள் பேச்சுவார்த்தைகள் மிகச் சிறப்பாக முன்னேறி வருகின்றன. 2025ம் ஆண்டு அக்டோபர்- நவம்பர் காலக்கெடுவிற்குள் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும்'' என தெரிவித்தார்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் ரஷ்யாவுடன் இந்தியா கச்சா எண்ணெய் வாங்கும் விவகாரத்தில் இந்தியா மீது அமெரிக்கா கூடுதலாக 25 சதவீதம் என 50 சதவீம் வரை வரியை உயர்த்தி அறிவித்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப்.
இந்நிலையில் இன்று (ஆக.16) வெளியான தகவலில், இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக வரும் ஆக.25 முதல் 29 தேதி வரை பேச்சுவார்த்தை நடத்தி ட அமெரிக்க குழுவினரின் இந்திய வருகையும் திரும்ப பெறப்பட்டதாகவும், வேறு தேதி விரைவில் அறிவிக்கப்படஉள்ளதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன