வக்ப் சட்ட திருத்தம் 9ல் இந்திய கம்யூ., ஆர்ப்பாட்டம்
வக்ப் சட்ட திருத்தம் 9ல் இந்திய கம்யூ., ஆர்ப்பாட்டம்
ADDED : ஏப் 05, 2025 08:41 PM
சென்னை:'வக்ப் சட்ட திருத்தத்தை கண்டித்து, தமிழகம் முழுதும் ஏப்ரல் 9ம் தேதி, இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்' என, அக்கட்சியின் மாநிலச்செயலர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
பார்லிமென்ட் ஜனநாயக முறைகளை நிராகரித்து, பெரும்பான்மை மத அடிப்படைவாதத்தின் அடிப்படையில், ஹிந்து ராஷ்டிராவாக இந்தியாவை கட்டமைக்கும் முயற்சிகளை, மோடி அரசு தீவிரப்படுத்தி வருகிறது.
முஸ்லிம் சமூகத்தின் சொத்துக்களை பாராமரித்து வரும் வக்ப் வாரிய சட்டத்தில், மோடி அரசு திருத்தம் செய்துள்ளது. எதிர்க்கட்சிகள், ஜனநாயக சக்திகளின் எதிர்ப்பையும் மீறி, இதற்கான சட்டத்தை, பார்லிமென்டில் மோடி அரசு நிறைவேற்றியுள்ளது.
இதற்காக மோடி அரசை கண்டித்தும், வக்ப் சட்டத் திருத்தத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும், இந்திய கம்யூனிஸ்ட் சார்பில், வரும் 9ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

