ஆரோவில்லில் சுய தொழில் துவங்க உதவி இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் இயக்குநர் உறுதி
ஆரோவில்லில் சுய தொழில் துவங்க உதவி இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் இயக்குநர் உறுதி
ADDED : ஜன 28, 2025 05:13 AM

வானுார்: சர்வதேச நகரமான ஆரோவில் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள் சுயதொழில் வாய்ப்புகளை பெறுவதற்கு தேவையான உதவிகளை செய்ய தயாராக உள்ளதாக, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் சர்வதேச நகரமான ஆரோவில் அமைந்துள்ளது. ஆரோவில் அறக்கட்டளையின் செயலர் ஜெயந்தி ரவி வழிகாட்டுதலின்படி, ஆரோவில் வாசிகள் பலர் சிறு மற்றும் நடுத்தர தொழில்களை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், ஆரோவில்லுக்கு இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் இயக்குநர் சஞ்சய ரஸ்தோகி வந்தார். ஆரோவில்லில் நடைமுறையில் உள்ள தொழில் ஒத்துழைப்பு வாய்ப்புகள் குறித்து, ஆரோவில் அறக்கட்டளையின் சிறப்பு அலுவலர் சீதாராமனுடன் கலந்துரையாடினார்.
தொடர்ந்து அவர், ஆரோவிலில்லில் செயல்பட்டு வரும் சாக்லேட், தோல்பொருள்கள், இசைக்கருவிகள், மெழுகுவர்த்தி உற்பத்தி மற்றும் நுண்கலை தொழில் கூடங்களை பார்வையிட்டார்.
பின், சஞ்சய் ரஸ்தோகி கூறியதாவது;
ஆரோவில் மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள கிராமங்களில்தொழில் தொடங்க ஆர்வமுள்ளவர்களுக்கு எளிய முறையில் கடனுதவி வழங்கவும், தொழில் வளர்ச்சியில் மேம்பாடு அடையவும், ஆரோவில்லின் வணிக நடைமுறைகளை எளிதாக்கும் வகையில் வங்கிக் கிளையை தொடங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் புதுச்சேரி பிராந்திய மேலாளர் சந்தோஷ் உடனிருந்தார்.