டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி ரூ.68.8 : எல்லா பொருட்களும் விலை ஏறும் அபாயம்: மத்திய அரசின் உணவு பாதுகாப்பு சட்டம் காரணம்?
டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி ரூ.68.8 : எல்லா பொருட்களும் விலை ஏறும் அபாயம்: மத்திய அரசின் உணவு பாதுகாப்பு சட்டம் காரணம்?
UPDATED : ஆக 29, 2013 12:10 AM
ADDED : ஆக 28, 2013 11:41 PM

சென்னை:அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, தொடர்ந்து அதிகரிப்பதால், அனைத்து பொருட்களின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நாடு இதுவரை சந்தித்திராத பொருளாதார நெருக்கடியை சந்திக்கிறது.
கடந்த சில நாட்களாக, டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு சரிந்து வந்தாலும், நேற்று டாலருக்கு நிகராக ரூபாய் மதிப்பு, ரூ.68.8 என்று சரிந்து, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது; தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்தது. கச்சா எண்ணெய் இறக்குமதி சுமை மேலும் அதிகரிக்கும் நிலை உட்பட பல்வேறு பிரச்னைகளை சமாளிக்க, மத்திய நிதியமைச்சகம் நடவடிக்கை எடுத்திருக்கிறது. இருந்த போதும், மத்திய அரசின் முக்கிய திட்டமான, உணவு பாதுகாப்பு மசோதா நிறைவேற்றப்பட்டால், ஏழை மக்களின் பசியை முற்றிலும் ஒழிக்கும் என வாதங்கள் வைத்தாலும், அதை அமல்படுத்த தேவைப்படும், 90 ஆயிரம் கோடி ரூபாய் சுமையாகும் என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது. இது, தற்போதைய பொருளாதார பலவீனத்தை வெளிச்சமிட்டு காட்டி இருக்கிறது.'ரூபாய் மதிப்பு வீழ்ச்சி ஒரேயடியாக சீராகாவிட்டாலும், அது அன்னியச் செலாவணி சந்தையில் அதற்குரிய இடத்தை பெறும்' என, மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். ஆனால், பங்குச் சந்தை வீழ்ச்சி, தொழில் துறையில் ஏற்பட்டிருக்கும் அவநம்பிக்கை, இனி அடுத்த தேர்தலில் புதிய ஆட்சி தான், தற்போதைய பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படுத்தும் என்ற நிலையை இப்போது உருவாக்கிவிட்டது.
ஏற்கனவே ஏற்றுமதிக்கும், இறக்குமதிக்கும் ஏற்பட்டுள்ள அதிக இடைவெளியை சந்திக்க , அரசு முயன்று வருகிறது.இந்த ரூபாய் மதிப்பு வீழ்ச்சி மற்றும் பொருளாதார பாதிப்பு நேரடியாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் முதல், நுகர்பொருள், வாகனம், பிரிட்ஜ், மொபைல் போன், 'டிவி' உள்ளிட்ட அன்றாட உபயோக சாதனங்கள்
@nextcolumn@ விலையை உயர்த்தும். இறக்குமதி மூலம் தயாரிக்கப்படும், உற்பத்தி பொருட்கள் அனைத்தும் விலை உயரும்.தவிரவும் கச்சா
எண்ணெய் இறக்குமதி விலையும், டாலர் மதிப்பு உயர்வால் அதிகரிக்கும்.
பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு உள்ளிட்டவற்றின் விலை
உயர்த்தப்படும். சமையல் எண்ணெய் இறக்குமதி விலையும் இனி அதிகமாகும்.மத்திய
அரசின் உணவு பாதுகாப்பு சட்டம் அமலாகி செயல்படும் போது, இதன் பாதிப்பு எந்த
அளவுக்குஇருக்கும் என்பதை, நேரடியாக உணர முடியும். ஏனெனில், அதிக மானியம் தரப்படும் போது, அத்திட்ட அமலாக்கத்தில் குளறுபடி மற்றும் கசிவு காரணமாக ஏற்படும் பாதிப்பு, பெருமளவில் இருக்கும் என, பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.
அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, நாள்தோறும் புதிய வீழ்ச்சி வரம்பை சந்தித்து வருவது, அச்சத்தை ஏற்படுத்துகிறது.நேற்று முன்தினம், ரூபாய் மதிப்பு, முதன் முறையாக, 66ஐ தாண்டி, 66.19 ஆக இருந்தது.இந்நிலையில், நேற்று அன்னியச் செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, முதன் முறையாக, 68 ரூபாயைத் தாண்டியது. வர்த்தகத்தின் இடையே, 68.85 ஆக, மிகப் பெரிய சரிவை சந்தித்தது.இதையடுத்து, ரிசர்வ் வங்கி, அதிக அளவில் டாலரை விற்பனை செய்யுமாறு வங்கிகளுக்கு உத்தரவிட்டது. இதன் காரணமாக, டாலர் புழக்கம் அதிகரித்து, ரூபாய் மதிப்பின் சரிவு, ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டது. எனினும், நேற்று, வர்த்தகத்தின் இறுதியில், ரூபாய் மதிப்பு, முன்தினத்தை விட, 2.58 ரூபாய் குறைந்து, 68.83 ஆக சரிவடைந்தது. கடந்த, 1995ம் ஆண்டிற்குப் பின், நேற்று தான், ரூபாய் மதிப்பு, ஒரே நாளில் இந்த
@nextcolumn@ அளவிற்கு குறைந்துள்ளது.கடந்த மூன்று வர்த்தக தினங்களில், ரூபாய் மதிப்பு, 8.6 சதவீதமும், நடப்பு ஆகஸ்ட் மாதத்தில், 12 சதவீதமும் வீழ்ச்சிகண்டுள்ளது. மொத்தத்தில், நடப்பாண்டு ஜனவரி முதல், தற்போது வரை, அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, 19.50 சதவீதத்திற்கும் அதிகமாக வீழ்ச்சி கண்டுள்ளது. இந்நிலையில், 'ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி குறித்து பீதி அடையத் தேவையில்லை; அது தானாகவே ஒரு நிலைக்கு வரும்' என, பொருளாதார விவகாரங்கள் துறை செயலர், அர்விந்த் மாயாராம் தெரிவித்துள்ளார்.சென்ற நிதியாண்டில், உள்நாட்டு பொருளாதார வளர்ச்சி, 5 சதவீதமாக குறைந்துள்ளது. இது 5.5 சதவீதமாக உயரும் என, மத்திய நிதியமைச்சர் சிதம்பரம், அண்மையில் தெரிவித்திருந்தார்.ஆனால், தற்போதைய ‹ழலில், இந்த இலக்கை எட்டுவதற்கான சாத்தியமில்லை என, முன்னணி நிதி ஆய்வு அமைப்புகள் தெரிவித்தன.
இந்த நிலையை பொருளாதார அவசர நிலை என, எதிர்க்கட்சிகள் வர்ணிப்பதுடன், இனி இதற்கான தீர்வைக் காண, புதிய திட்டங்களைக் கொண்ட ஆட்சி, தேர்தலுக்கு பின் அமைவதே தீர்வாகும் என்று கருத்து தெரிவித்துள்ளன.
