உள்ளடக்கத்திற்கு செல்ல
பால் குடித்தபோது விபரீதம் மூச்சுத்திணறி குழந்தை பலி
பால் குடித்தபோது விபரீதம் மூச்சுத்திணறி குழந்தை பலி
ADDED : அக் 18, 2026 05:59 PM
அ நிறம் | அளவு
திருப்பத்துார்: திருப்பத்துார் மாவட்டம் பொம்மிகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சந்தோஷ்குமார், 32; இவரது மனைவி செவ்வந்தி, 29; தம்பதிக்கு ஆண், பெண் என இரு குழந்தைகள். ஒன்பது மாதமேயான ஆண் குழந்தை ஜெஸ்விக்கு ஒரு வாரமாக உடல் நலம் பாதித்திருந்தது.
செவ்வந்தி நேற்று முன்தினம் இரவு தாய்ப்பால் கொடுத்தார். அப்போது குழந்தைக்கு புரையேறி மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனடியாக திருப்பத்துார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். மருத்துவ பரிசோதனையில் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டது தெரிந்தது. திருப்பத்துார் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
