உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஜன 25, 2026 05:51 AM

அ நிறம் | அளவு
இடைநிலை ஆசிரியர்கள், சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு கடந்த டிசம்பர் 26ம் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அவர்களை கைது செய்து அடைத்து வைப்பது, கைது செய்தவர்களை இரவு நேரங்களில் சென்னைக்கு வெளியில் வெகுதொலைவில் இறக்கி விடுவது போன்ற செயல்களில், தி.மு.க.. அரசு ஈடுபட்டுள்ளது. இன்னும் ஒரு மாதத்தில், பள்ளி இறுதி தேர்வுகள் நடக்கவுள்ள நிலையில், ஆசிரியர்களின் போராட்டம் நீடித்தால், மாணவர்கள் மோசமாக பாதிக்கப்படுவர். ஆனால், இதுகுறித்த எந்தக் கவலையும் தி.மு.க., அரசுக்கு இல்லை. ஒருபுறம் ஆசிரியர்களுக்கு அநீதி தொடர்கிறது; மறுபக்கம் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது. அடக்குமுறைகளால் ஆசிரியர்களை பணிய வைத்து விடலாம் என்ற மனப்பான்மையை கைவிட்டு, அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றி, போராட்டத்தை தி.மு.க., அரசு முடிவுக்கு கொண்டு வர வேண்டும். - ராமதாஸ், பா.ம.க., நிறுவனர்
