தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ அணை நீரை பம்பிங் செய்ய வலியுறுத்தல்

 அணை நீரை பம்பிங் செய்ய வலியுறுத்தல்

 அணை நீரை பம்பிங் செய்ய வலியுறுத்தல்


ADDED : மார் 19, 2026 04:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 19, 2026 04:58 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல்: பழநி குதிரையாறு அணையில் இருந்து மின் மோட்டார் மூலம் பம்பிங் செய்து நெற்பயிர் விவசாயிகளுக்கான பாசன நீரை வழங்க கலெக்டர் உத்தரவிட வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத் துள்ளனர்.

பழநி ஆண்டிபட்டி நாகன்வலசு ராஜவாய்க்கால் தனக்கலங்காடு ஆலமரம், புதுகுளம், அம்மாகுளம், ராயகுளம் நீரினைப் பயன்படுத்துவோர் சங்கம் சார்பில் தலைவர் குருசந்திரசேகர், நிர்வாகிகள் தங்கலோகநாதன், ராமசாமி, செல்லதுரை, தங்கராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் வந்தனர். தேர்தல் விதிகள் அமலில் உள்ளதால் சிறப்பு அனுமதி பெற்று கலெக்டர் சரவணனை சந்தித்தனர். அப்போது அவர்கள், 80 அடி கொண்ட குதிரையாறு அணையில் வாய்க்கால் மேலேயும் அணை கீழ் பகுதியிலும் அமைந்துள்ளதால் 52 அடி ஆனதும் பாசனத்திற்கு தண்ணீர் வராது.

மழையும் பொய்த்துப் போனது. தற்போது நெற்பயிர்களை விளைவிக்க 45 நாட்களுக்கான தண்ணீர் வேண்டும். நீர்மட்டம் குறைந்துள்ளதால் கலெக்டரின் சிறப்பு உத்தரவில் அணையில் இருந்து மின்மோட்டார் மூலம் பம்பிங் செய்து வாய்க்காலில் தண்ணீர் விட வழிவகை செய் வேண்டும் என வலியுறுத்தினர். கலெக்டரும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us