ADDED : ஜூன் 17, 2025 11:45 PM
சென்னை:நடப்பாண்டு பருவநிலை மா உற்பத்திக்கு உகந்ததாக அமைந்ததால், சராசரி மகசூலான எக்டருக்கு ஐந்து முதல் ஆறு டன் என்பது, எட்டு டன்னுக்கு மேலாக அதிகரித்துள்ளது.
இதனால், மாம்பழக்கூழ் தயாரிப்பு மற்றும் பதப்படுத்தலுக்கு உகந்த, பெங்களூரா ரகம், பதப்படுத்தப்படும் நிறுவனங்களால், விவசாயிகளிடம் இருந்து, குறைந்த விலைக்கு கொள்முதல் செய்யப்படுகிறது.
இது தொடர்பாக, வேளாண் துறை செயலர் தலைமையில், மா பதப்படுத்தும் நிறுவனங்களுடன், நேற்றுமுன்தினம் ஆலோசனை நடந்தது.
அப்போது, 'மா உற்பத்தி செய்யும் விவசாயிகள் நலன் கருதி, மா பதப்படுத்தும் நிறுவனங்கள், மாம்பழக்கூழ் தயாரிக்கும் பணிகளை உடனே துவக்க வேண்டும். மாம்பழக்கூழ் தயாரிக்க, பெங்களூரா ரகத்தை நியாயமான விலையில், உடனடியாக விவசாயிகளிடம் இருந்து, மா பதப்படுத்தும் நிறுவனங்கள் கொள்முதல் செய்ய வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டது.
அதை ஏற்று மாம்பழக்கூழ் தயாரிக்கும் நிறுவனங்கள், கூழ் உற்பத்தியை தற்போது ஆரம்பித்துள்ளன என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.