ஊர்க்காவல் படையினருக்கு இன்சூரன்ஸ் வி.ஐ.டி., செல்வம் அறிவிப்பு
ஊர்க்காவல் படையினருக்கு இன்சூரன்ஸ் வி.ஐ.டி., செல்வம் அறிவிப்பு
ADDED : அக் 27, 2025 12:48 AM

சென்னை: ''ஊர்க்காவல் படையினருக்கு இன்சூரன்ஸ் இலவசம்,'' என, வி.ஐ.டி., பல்கலை துணை தலைவர் ஜி.வி.செல்வம் அறிவித்துள்ளார்.
தலைமுறை பேரவை மற்றும் நாராயணி மருத்துவமனை இணைந்து, வேலுார் மாவட்ட ஊர்க்காவல் படையினருக்கான மருத்துவ முகாம், வேலுாரில் உள்ள காவலர் திருமண மண்டபத்தில் நடத்தப்பட்டது.
எல்லை தெய்வம் அதில், வி.ஐ.டி., துணை தலைவர் செல்வம் பேசியதாவது:
என் பிறந்த நாளை, சேவை நாளாக மாற்றிய தலைமுறை பேரவைக்கு நன்றி. ஊர்க்காவல் படையினர் எல்லை தெய்வமாக உள்ளனர்.
காவல் துறையினர் பாதுகாப்பு பணிகளுக்காக வெளியூர் செல்லும்போது, ஊர்க்காவல் படையினர் தான் மக்களை பாதுகாக்கின்றனர்.
ஊர்க்காவல் படையினருக்கு இன்சூரன்ஸ் இலவசமாக வழங்கப்படும்.
உடற்பயிற்சிக்கு ஈடாக மனப் பயிற்சியும் நமக்கு தேவை. எந்தப் பிரச்னை வந்தாலும், அதை எதிர்கொள்ள வேண்டும். பிரச்னைகளை கண்டு கவலைப்படக் கூடாது.
மகிழ வேண்டும் கடவுள் கொடுக்கும் பணம், அன்பு, அறிவை மற்றவர்களுக்கும் வழங்கி மகிழ வேண்டும். தொழிலதிபர் ஷிவ் நாடார் தினமும், 6 கோடி ரூபாய் நன்கொடை வழங்குகிறார். மற்றவர்களுக்கு உதவி செய்வதை, ஒரு கடமையாக நினைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
வேலுார் சரக டி.ஐ.ஜி., தர்மராஜன் பேசியதாவது:
வி.ஐ.டி., பல்கலை துணை தலைவர் ஜி.வி.செல்வம் சேவை மனப்பான்மையுடன் செயல்பட்டு வருவது பாராட்டுக்குரியது. நாம் யாரும் உடல்நலனில் அக்கறை கொள்வதில்லை. வாழ்க்கையை திட்டமிடாததால் நோய்கள் அதிகம் வருகின்றன.
பயிற்சி தேவை திடீர் திடீரென உயிரிழப்புகள் நடக்கின்றன. எனவே, அனைவரும் தினமும் 40 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ஊர்க்காவல் படையினருக்கு பயிற்சி தேவை.
இவ்வாறு அவர் பேசினார்.
ஊர்க்காவல் படை உதவி கமாண்டன்ட் ஜெனரல் சுரேஷ், ஏரியா கமாண்டர் குமரன், துணை ஏரியா கமாண்டர் அர்ச்சனா சித்தார்த், தலைமுறை பேரவை நிர்வாகிகள் சீனிவாசன், பூமிநாதன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

